பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

35T615i) (Up55)sm) (Defense)

இது வரை பந்துடன் முன்னேறி, வளையத்திற்குள் எறிந்து, வெற்றி எண்களைப் பெறும் வழிகளைக் கண்டோம். முன்னேறி நாம் செல்வது போல், காவலைக் கடந்து செல்ல வழியமைத்து வெற்றி எண் பெறுவது போல, எதிரிகளும் நாம் காக்கின்ற வளையத்தை நோக்கி முன்னேறி வருவார்கள். அந்த நேரத்தில் நம் எல்லையை எப்படிக் காவல் செய்வது, அவர்களை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

முன்னேறிச் செல்லும் வழிகளால் பாதி ஆட்டத்தை வென்று விடலாம். மீதியை? அதற்கும் நம்மை ஆயத்தப் படுத்திக் கொள்வது நம் கடமையல்லவா?

வளையத்தை நோக்கிக் குறியோடெறியும் எல்லாப் பந்தும் விழுந்து வெற்றி எண்களைத் தந்து விடுமா? தராது. குறி தவறி வளையத்தில் பட்டும், பலகையில் (Board) பட்டும் எதிர்த்துத் திரும்பும். அந்தப் பந்து திரும்பியும் எதிர்க் குழுவினரின் கையில் கிடைத்து விட்டால், அது நமக்கு எதிராக வெற்றி எண்களைப் பெற்றுத் தரலாம். அல்லது வெற்றி எண்ணைப் பெறுவதற்குரிய வாய்ப்பையும் அவர் களுக்குத் தந்து விடலாம்.

ஆகவே, அது போல வாய்ப்புக்களை நாம் அவர்களுக்கு இயன்ற வரை தரக் கூடாது. நாம் எந்த விடிையும் அந்தப் பந்தைப் பிடிப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும். அதற்கான ‘முன்னறியும் பண்பை’ (Anticipation) வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாருன முன்னறியும் பண்பால் முந்திக் கொள்ளும் திறனை ஆடிப் பழகும் அதிகப் பயிற்சியால் தான் பெற முடியும்.

அதல்ை, முன்னேறி வரும் எதிரிகளைத் திட்டம் போட்டு முக்கியமான இடத்திற்குள் நுழைய விடாதபடி தடுத்து