பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைப் பந்தாட்டம் 111

வளர்ந்து பெருகியதைப்போல, மசாசியூசெட்டில் பிறந்த மின்டானெட், ஸ்பிரிங்பீல்டில் கைப்பந்தாக வளர்ந்து செழுமையுற்றது.

உள்ளகத்திலேயே (indoor) இதுவரை ஆடப்பெற்ற இந்த ஆட்டம், பரந்த வெளியிலேயும் ஆடுகின்ற நிலைமைக்கு உயர்ந்தது. ஆடுகளத்தை நன்முக, செப்பனிட்டு அமைத்து, ஒரு பந்தையும் பெற்று, இந்த விளையாட்டை ஆரம்பிப்பது ஒரு கைகூடாத கடினமான காரியமல்ல. ஏனெனில், இந்த வி%ளயாட்டிற்கான பொருட்களையெல்லாம் அதிகமான விலை கொடுத்துத் தான்பெற வேண்டுமென்பதும் அவசியம்இல்லை. ஆடுகளத்தையும் பெரிய பெரிய பொறி இயல் வல்லுநர்கள் (Engineers) as 55 வரையறுத்துத் தந்துதான் திடல் அமைக்க வேண்டும் என்பதுமல்ல. ஆகவே, பந்தும், ஆடுகளமும் எளிதாகக் கிடைத்தால், ஆடுவோருக்கு உண்டாகும் உற்சாகத்தைக் கூறவும் வேண்டுமோ?

கடற்கரையிலும். கோடை பொழுது போக்கு இடங் களிலும்கூட புதிய ஆடுகளங்கள் தோன்றின. இளைஞர் களின் அதிகமான ஈடுபாட்டின் தீவிரத்தைக் கண்ணுற்று, நடுத்தர வயதினரும், வயது வந்தவர்களும்கூடச் சேர்ந்து, இதில் ஆடத் தொடங்கினர். கைப்பந்தாட்டம் இன்னும் சிறந்து வளர, பொதுநிலை ஆடுகளம் அமைக்கும் இயக்கம்’ (Public Playground Movements) 3, 15th soft (ol'u'logy என்றால் அது மிகையல்ல. விளையாடும் இடங்களில், ஒரு கைப் பந்தாட்ட ஆடுகளம் இல்லாவிடில், அந்த இடம் நன்கு பரிமளிக்காத நிலையில் ஆகிவிடுகிறது என்ற அளவுக்கு நாட்டின் நிலைமையில் பெருமாற்றம் திகழ்ந்தது.

இவ்வாறு மக்கள் மனதிலே இடம் பெற்ற ஆட்டங் களில் ஒன்றாகக் கைப்பந்தாட்டமும் மாறியது. பள்ளி களிலும், கல்லூரிகளிலும் ஆட்டம் இடம் பெற்றது.

சேனையில் பணியாற்றும் படைஞர்களுக்கும் இதில் ஆர்வம்