பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால் பந்தாட்டம் 11

பந்தாட்டத்தைப் பற்றிய குறிப்பு ஒன்று மறை பொருளாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. முழு விவரமும் தெரியவில்லை.

பாபிலோனிலும் (Babylon) பண்டைய எகிப்திலும் வாழ்ந்த மக்கள், ஒரு வகை கால் பந்தாட்டத்தை ஆடி வந்தனர் என்பதற்கு சான்றுகள் உள்ளன என்பார் சில ஆசிரியர்கள். இன்னும் முக்கியமான இரண்டு நாடுகளில் கால் பந்தாட்டம் இருந்ததாகக் கூறப்படும் வரலாற்றையும் சிறிது காண்போம்.

கால் பந்தாட்டத்தைப் போலவே பல வழிகளில் ஒத்திருக்கும் விளையாட்டொன்றை, பண்டைய கிரேக்கர்கள் ஆடி வந்ததாகத் தெரிய வருகின்றது. இதற்குப் பெயர் “கர்பாசுடன் (Harpaston) என்பதாகும். ‘ஒரு குழுவினர் மறு குழுவினருக்காக உள்ள கடைக்கோட்டைத் தாண்டி (End Line) அதன் மேலே பந்தை வைக்க முயற்சிப்பார். மற்ற குழுவினர் அதைத் தடுத்து, எதிர்க்குழுவினரின் கடைக் கோட்டில் வைக்க வேண்டும். ” இதுதான்: முக்கிய விதி. மற்றும் இதற்கென்று, தனிப்பட்ட விதிகளோ (Rules) ஒழுங்கோ (Form) ஆட்டத்தில் கிடையாது.

இந்த ஆட்டமும் ஸ்பார்ட்டா (Sparta) என்ற நாட்டில் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. ‘'ஸ்பார்ட்டா நாட்டின் வீரர்களுக்கு நல்ல உடற் பயிற்சியையும், நல்ல உடலுறுதி யையும் அளிப்பதற்காகவே இந்த ஆட்டம் பயன்படுத்தப் பட்டது. பின்னர். இந்நாட்டின் பண்பாடு, கலாச்சாரம் எங்கும் பெருகி வளரவே, இது கிரேக்க நாட்டிற்கும் பரவியது.கிரேக்கர்களும் இந்த ஆட்டத்தை மிகவும் விரும்பி பெருமளவில் ஆடத் தொடங்கினர். இதன் பின் தான் இந்த ஆட்டம் ரோமானியர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது’’ என்று கூறுவர் சரித்திர ஆசிரியர்கள்.

கிரேக்க நாட்டு ஜூலியஸ் போலக்ஸ் (Julius Pollux) எழுதிய நூல்களில், ரோமானியர் கால் பந்தாட்டத்தை