பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைப் பந்தாட்டம் | 5 ||

ஆடலாம். ஆலுைம், தடுக்கும் முறைகளை எவ்வாறு ஒன்பற்ற வேண்டும் என்று ஒவ்வொரு குழுவும் தங்களுக் குள்ளே முடிவு செய்து கொண்டு விடுவது நல்லது.

வலைக்கு மேலே கைகளை உயர்த்தி, விரல்களை விறைப்பாக இருத்தி விரித்து, இடைவெளியின்றி இரு கைகளையும் ஒரே சமமாக நிறுத்த வேண்டும். கைகள் வலையை மிகவும் ஒட்டியிராமல், மூன்று நான்கு அங்குலம் அப்பால் இருக்குமாறு நின்று, நன்றாகப் பார்வையை மேலே செலுத்திய படி தான் தடுக்க வேண்டும். தடுத்தவுடனே அல்லது தடுக்க முடியாத பிறகோ, கீழே குதிக்கும் பொழுதோ வலையைத் தொட்டோ, இழுத்தோ விடாமலும், நடுக் கோட்டைத் தாண்டி மறு பகுதியை மிதிக்காமலும் உடலைக் கட்டுப் படுத்திக் கொள்ளும் (Body Control) egy b sp Gaugr@tb.

உயரமான ஆட்களே தடுப்பதற்குத் தகுதியானவர்கள். ஆகவே முடிந்த வரை, அடிப்பவரும் மற்றும் உயர்த்தும் அமைப்பாளரும், ஆட்டக்காரர்கள் எல்லோரும் உயரமான வர்களாக இருந்தால் மிகவும் பயனுடையதாக இருக்கும். தடுத்து ஆடும் ஆட்டம், ஆட்டத்தில் பாதி வெற்றியைக் கொடுத்து விடும். அதற்காக அடிப்பதை விட்டு விட்டுத் தடுப்பதில் மட்டுமே முழுக் கவனத்தையும் செலுத்தக் கூடாது.

அடிப்பவர்களும் தடுப்பு முறையில் பயிற்சி இருந்தால் பங்கு பெறலாம். தெரியவில்லையென்றாலோ, அல்லது அடிக்கடித் தாண்டிக் குதிப்பதால் உடலில் சக்தியில்லை (No Stamina) என்று பெருமையாகக் கூறிக் கொள்வாரும், மற்றவர்களைத் தடுக்கச் சொல்லி விட்டு விடலாம். நல்ல தடுக்கும் திறமையுள்ளவர்களே குழுவில் இடம் பெற்றிருந் தால், ஆடுவதற்கும் நன்முக இருக்கும்.