பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.

காலத்திலிருந்து தொடர்ந்து வருகிறது எனச் சரித்திர ஆசிரியர்கள் அறுதியிட்டுக் கூறுகின்றனர்.

கற்காலத்தில் (Stone age) வாழ்ந்த மக்கள் தங்களது உடல் உழைப்பினுலே வாழ வேண்டிய நிலைமையைப் பெற்றிருந்தார்கள். அவர்களின் வழி வழி வந்த மக்கள், தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான வசதிகளை, ஒரளவு திருப்தி அளிக்கக் கூடிய முறையில் பெற்று வாழ்ந்தாலும், உடல் வலிவுக்காகவும், திறனுக்காகவும், இடைவிடாது. தேகப் பயிற்சிகளையும் செய்து வந்தனர். :

அவ்வாறே அன்று தொட்டு செய்து வந்த முற்காலத்தினர், தாண்டுவதிலும், ஒடுவதிலும், மல்யுத்தப் போட்டிகளிலும் மற்றும் இதர ஆட்டங்களிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்தனர். இந்த ஆட்டங்களில், இடை இடையே ஏற்படுகின்ற களைப்பும், சலிப்பும் அவர்களைப் புதுமுறையான ஆட்டங்களைக் காணத் தூண்டியது. புதுமையான ஆட்டத்தின் மூலம் புத்துணர்ச்சியும். பேருவகையும் பெற விரும்பினர்.

அதற்காக சிறு சிறு பொழுது போக்கு விளையாட்டு. முறைகளைப் பின்பற்றினர். உருண்டை வடிவமான கூழாங் கற்களைப் பொறுக்கி எடுத்து, அவைகளை உருட்டி விட்டு: வேடிக்கை பார்த்தனர். கற்கள் உருண்டு ஓடாத பொழுது, கைகளைக் கொண்டு உருட்டி முன்னேக்கித் தள்ளினர். பிறகு அருகில் கிடந்த சிறு சிறு குச்சிகளை எடுத்து, கூழாங்கற்களைத் தள்ளிக் கொண்டு தாங்கள் விரும்பும் திசையை நோக்கி ஒட விட்டனர். கூடவே ஒடினர்.

இவ்வாறு ஆரம்பமான விளையாட்டுத்தான் இறுதியில் *G*r- 153 sj^itum lil T&* (Stick and bali game) ιοΓρ வந்திருக்கலாம் என்பது ஆராய்ச்சி வல்லுனர்களின் கருத்து.

இதற்கு ஒரு சில சான்றுகளையும் காட்டுவர். ‘கூழாங்: