பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளைகோல் பந்தாட்டம் 159.

இது போலவே, இடையர்களின் வளைந்த கோல்கள்

போன்று இந்த ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்டதால்,இதன்

பெயரே, காக்கெட்’ என்று வந்தது எனக் கொள்வாரும் உண்டு.

பிரெஞ்சு நாட்டிலிருந்துதான் இந்த விளையாட்டு இங்கிலாந்தை நோக்கிச் சென்றது என்பர் ஆராய்ச்சி அறிஞர்கள். பிரிட்டனுக்கு இந்த ஆட்டம் எப்படி வந்தது? எப்பொழுது வந்தது? அல்லது இந்த ஆட்டம் இங்கிலாந்தில் தான் பிறந்ததா என்ற கேள்விகளுக்கு இது வரை முறையான பதில்கள் கிடைக்கவில்லை. ஆனல், இன்றைய வளைகோல் பந்தாட்டத்தின் உன்னத நிலை உருவானதற்குக் காரணம் இங்கிலாந்துதான் என்றாலும், யாராலும் மறுக்க அமுடியTது.

அங்கே தான் இந்த ஆட்டம் வளர்ந்து, வாழ்ந்து, செழித்துப் பெருகியது என்பது உண்மை. ஆட்டத்திற்கு உயிர் கொடுத்த பெருமை இங்கிலாந்தையே சேரும் என்பது இப்பொழுது தெளிந்த முடிவாகிறது. இந்த விளையாட்டின் சிறப்பைக் கண்ணுற்று, மகிழ்ந்து, தங்கள் நாட்டிற்கு ஆங்கில மக்கள் எடுத்துச் சென்றனர்.

‘காக்கெட்’ என்று கூறப்படும் ஆட்டத்தின் பிரெஞ்சு உச்சரிப்பு காக்கே’ (Hockey) என்பதாகும். அந்த பிரெஞ்சு மொழி உச்சரிப்பை ஆங்கில முறைப்படி அவர்கள் காக்கி’ (Hocky) என்று திருத்தி அமைத்து வழங்கி விட்டனர் என்ற கூற்றே பொருந்தும். இதுவே உண்மையென்று பலரும்

மனதார ஒப்புக் கொள்கின்றனர்.

ஒத்த முறையில் இல்லாவிட்டாலும், இதே தன்மையில் வளைகோல் (Hockey) ஜரோப்பாவில் பல பாகங்களிலும் பல ஆசிய நாடுகளிலும், வட, தென் அமெரிக்கப் பகுதி