பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

இதே ஆண்டில் அடிக்கும் வட்டத்திற்குள் முரண் பாடான தவறுகள் நேர்வதைத் தடுக்க, சரியான தண்டனை தருவது போல, ‘56&LL'il 16,60’ (Penalty Bully).

உண்டாக்கப் பட்டது.

இலக்குக்கு அருகாமையில் சென்று, பந்து உயரப் போகும் வண்ணம் உயர்த்தி அடித்து, அதல்ை ஆபத்து நிகழ்வதைத் தடுக்கவும், முனை அடி’யிலிருந்து (Corner Hit). இதே போல் பறந்து வரும்படி பந்தை அடித்து ஆடுவதை யும் தவறு (Foul) என்று தடுக்கப்பட்டது.

முனை அடியிலிருந்து அடிக்கப்படும் பந்தை, இலக்கிற்குள் அடித்துச் செலுத்து முன்னர், தாக்கும் குழுவினர் (Attacking Team) ஒருவரால் பந்து நன்கு தடுத்து நிறுத்தப் பட்டு (பந்து சிறிது நகரலாம்), அதன் பின்னரே இலக்கிற்குள் அடிக்கப்பட வேண்டும் என்ற விதி அமைக்கப்பட்டது. இதல்ை அபாயத்தைத் தடுக்கும் எண்ணம் நிறைவேறியது.

1906ஆம் ஆண்டு, உள்ளுருட்டலில் (Roll-in) சிறிது மாற்றம் ஏற்பட்டது. இதற்கு முன் முன்புறம் நோக்கித். தான் (Forward direction) உள்ளுருட்டலில் பந்தை உருட்ட வேண்டும்; வேறு எந்தத் திசையிலும் உருட்டக் கூடாது. என்ற விதிமாறி எந்தத் திசைப் பக்கமும் உருட்டலாம் என்ற விதி ஏற்படுத்தப்பட்டது.

ஒரு ஆட்டக்காரர் தன்னுடைய பகுதியில் (Own Half). நின்று கொண்டிருந்தால், எந்த நேரத்திலும் அவர் அயலிடத்தில் (Off Side) நிற்பதாகக் கருதப் படுவதில்லை என்ற புது விதி அயலிட விதிகளோடு இணைக்கப் பட்டது.

1909-91, b =9,6&TG) 35 or L(p&’ (Penalty Corner) 3ror sp. புது முறையான விதி அமைக்கப் பட்டது.