பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளைகோல் பந்தாட்டம் 171

நினைவுக்காகக் கொடுக்கப் பட்டதாகும். (Rangasamy Cup Sports and Postime.)

விளையாட்டும் பொழுது போக்கும் என்ற வார மலரில் திறம்பட செயலாற்றிய திரு. ரெங்க சாமிக்கு அந்த நிறுவனத்தார் அளித்ததே அந்த பரிசுக் கோப்பையாகும். பின்னர்,பாரதம் ஆசிய வெற்றிப் போட்டி (Asian Champion ship) ஒன்றை நடத்தி, பெருமை பெறத்தக்க அளவிலே வெற்றி அடைந்தது.

உலகிலே தலை சிறந்த நாடாக பாரதம் இந்த ஆட்டத்தில் 1928லிருந்து விளங்கிலுைம், இரண்டு முறை பாகிஸ்தாைேடு தோற்றுவிட்டது. அதன் பின்னர் அருமுயற்சியெடுத்துக் கொண்ட பாரதம், சிறந்த பயிற்சியைக் கொடுத்து, 1980ஆம் ஆண்டு மாஸ்கோவில் வென்று மீண்டும் தன் பெருமையைக் காத்துக் கொண்டது.

இருப்பினும் சிறந்த ஆட்ட வீரர்களைத் தெரிந்தெடுத்து, ஊக்குவிப்பதும், அவர்களை சிறந்த மு ைற யி ல் கெளரவிப்பதும் அரசினரின் கடமையாகும். அனுபவத் திற்காக பல வெளி நாடுகளுடன் போட்டியில் கலந்து கொள்வதும், ஆதரவும் நம் நாட்டின் குழுவை இன்னும் வலிமை உடையதாக மாற்ற உதவும்.

விளையாடும் முறை

5 முன்னுட்டக்காரர்கள், 3 இடைக் காப்பாளர்கள், 2 கடைக்காப்பாளர்கள், 1 இலக்குக் காவலன், என்று ஒரு குழுவுக்கு ஆட்டக்காரர்கள் உண்டு. ஒவ்வொரு ஆட்டக் காரருக்கும் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு வளைகோல் (Stick) உண்டு. இலக்குக் காவலனுக்குக் காலில் தடுப்பு சாதனங்களாக வளைகோலோடு, கால்களுக்கு மெத்தை உறை'யும் (Pads) உண்டு.