பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

ஆனல் இலக்கிற்குள் அடிக்கப்படும் பந்தானது, இலக்கிற்குள் போகும் முன்பு, ஒரு தடவையாவது அடிக்கும் வட்டத்திற்குள் தாக்கும் குழுவினரில் ஒருவரின் வளைகோலில் பட்டிருக்க வேண்டும். இல்லையேல் அது வெற்றி எண்ணுகக் (Goal) கருதப்பட மாட்டாது.

தாக்கும் குழுவினரால் அடிக்கப்படும் பந்து, தடுக்கும் குழுவினர் பகுதியின் கடைக் கோட்டிற்கு வெளியே சென்றால், ஆட்டத்தை மீண்டும் தனியடி மூலம்தான் (Free Hit) ஆரம்பிக்க வேண்டும். விதிகளின்படி இலக்கினுள் சென்று விட்டால், நடுக் கோட்டின் நடுப் பாகத்திலுள்ள மையப் புல்லியிலிருந்து புல்லி மூலம் ஆரம்பிக்க வேண்டும்.

தடுக்கும் குழுவினரின் வளைகோலில் பட்டு, பந்து கடைக் கோட்டிற்கு வெளியே சென்றால், அதற்காகக் கடைக் கோட்டிலுள்ள நெடு முனையில் (Long Corner) வைத்துப் பந்தை அடித்து ஆட்டத்தைத் தொடங்க வேண்டும்.

வேண்டுமென்றே (Intentionally) தடுக்கும் குழுவினர் பந்தைத் தங்கள்கடைக்கோட்டிற்கு வெளியே அனுப்பில்ை, _2, .. 560 B (p65rap&sruj (Short Corner or Penalty Corner) பந்தை வைத்து அடித்துத் தொடங்க வேண்டும். ஆட்டக்காரர்கள் நிற்கும் இடத்தின் நிலையை ‘முனை’ என்னும் பகுதியில் காண்க.

பக்கக் கோட்டிற்கு (Side Line) வெளியே பந்து சென்றால், பந்தை வெளியே அனுப்பிய குழுவுக்கு எதிராக, எதிர்க் குழுவினர் பக்கக் கோட்டிற்கு வெளியே நின்று, பந்தை உள்ளே தட்டிவிடல் (Push-in) வேண்டும். அப்பொழுது எல்லா ஆட்டக்காார்களும் 7 கெசக் கோட்டிற்கு (7 yards line) அப்பால் நின்று கொண்டிருக்க வேண்டும்.