பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 94 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

பெயர்களால் இந்த ஆட்டம் அழைக்கப்படுகிறது விதிகளுக்குட்பட்டு ஆடுகின்ற ஆட்டங்களிலும் தொடர் போட்டி ஆட்டங்களிலும், கபடி, கபடி என்று உச்சரித்துத் தான் பாடுவோர்கள் பாட வேண்டும்.

ஆல்ை, கிராமப்புறங்களில் ஆடுகின்ற மக்களிடையே இம்முறை இல்லை. கட்டுப்படுத்தக்கூடிய விதிகளும் சட்டங் களும் இல்லை. வழிவழி வந்து ஊறிப்போன பழக்கவழக்கங் களே ஆட்டத்தின் ஒழுங்கைக் கட்டுப்படுத்துகின்றன. பழங்கால வழக்கப்படி வந்துள்ள கிராமப் பாடல்களையும், வேடிக்கை நிறைந்த சொற்களையும் கொண்டே பாடிச் சென்று ஆடுகின்றனர் மக்கள்.

சடுகுடு ஆட்டம் எப்பொழுது எப்படி உருவானது என்பதை அறிய முடியவில்லை. தகுந்த வரலாறு கொண்டு குறிக்கப்படாததால் இது பழமை மிகுந்த ஆட்டமென்றே கருத இடமுண்டு. இந்த ஆட்டம் கிராமப்புறங்களில் தான் தோன்றியிருக்க வேண்டும் என்பது வரலாற்றாசிரியர்களின்

கருத்தாகும்.

பழங்காலத்தில் கிராமச் சிறுவர்கள் ஆடுமாடு களே ஒட்டிக்கொண்டு வயற்வெளிப் பக்கம் சென் றிருக்கும் போது இந்த நிகழ்ச்சி நடந்திருக்க வாய்ப்புண்டு. மாடு மேய்க்கும் சிறுவர்களில் ஒருவன், ஏதாவது தின்பண்டம் வைத்திருக்கலாம். அதை ஒருவன் கேட்க, அவன் தர மறுக்க, இவன் பிடிவாதமாக வேண்டுமென்று கேட்டு அவன் கையி லுள்ளதைப் பறிக்க முயல, அவன் திமிறிக் கொண்டு ஒட, இவன் குடுடா குடுடா என்று கேட்டுக் கொண்டே ஒடியிருக்கலாம்.

பண்டம் கேட்டவனும். விடாப்பிடியாகக் கத்திக் கொண்டே ஓடியது மற்றவர்களுக்கு வேடிக்