பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால் பந்தாட்டம் 39

அயலிடத்தில் இருந்ததாக அவர் குற்றஞ்சாட்டப் பட்டால், அதற்குத் தண்டனையாக எதிர்க் குழுவினர் அதே இடத்திலிருந்து ‘மறை முகத் தனியுதை உதைக்கும் iாய்ப்பைப் பெறுவர். இந்தத் தனியுதையால் இலக்கினுள் பந்தை உதைத்து வெற்றி எண்ணை’ப் பெற முடியாது.

விளையாடும் நேரத்தில், ஒருவர் அயலிடத்தில் நின்று கொண்டிருந்தாலும், ஆட்டத்தில் கலந்து கொள்ளாமல், கலந்து கொள்ள முயற்சிக்காமல் இருந்தாலும், அவர் அயலிடத்தில் இருப்பதாகக் கருதப்படவே மாட்டார். அங்கு நின்றிருந்து, பிறகு ஆட முயற்சித்தால்தான், அவர் அயலிடத்தில் உள்ளதாகக் கருதப்படுவார்.

(ஏ) வெற்றி எண் (Goal)

இரண்டு நேர்க் கம்பங்களுக்கு நடுவில், குறுக்குக் குச்சிக்குக் கீழாக, கடைக் கோட்டை முழுவதும் தாண்டி, பந்து கடந்து சென்றால்தான் அதை “Qau #) m) GTar” (Goal) என்று ஏற்றுக் கொள்ள முடியும்.

எதிர்க் குழுவினர் - பந்தைக் கையால் பிடித்து எறிந்தும், தூக்கிச் சென்றும், முன்னுக்குத் தள்ளியும் இலக்கினுள் செலுத்தினுல் அது வெற்றி எண்’ அல்ல. ஆல்ை, முழங்கால்களுக்கிடையிலும், கணுக்கால்களுக் கிடையிலும் பந்தைத் தூக்கிக் கொண்டு இலக்கினுள் சென்று விட்டால் அது வெற்றி எண் ஆகும்.

நேர் முகத் தனியுதையால், ஒறுநிலை உதையால், முனை உதையால், பந்தை இலக்கினுள் உதைத்து ‘வெற்றி எண் பெற முடியும். மறை முகத் தனியுதையால் நேராக வெற்றி எண் பெற முடியாது. ஆட்ட இறுதி நேரத்தில், அதிக வெற்றி எண் பெற்றவரே வென்றவராவார். இருவரும் சம வெற்றி எண்கள் பெற்றிருந்தால் ஆட்டம்