பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடைப் பந்தாட்டம் 55

கனவை நனவு படுத்திய 1891ஆம் ஆண்டில் ஒருநாள்! . உடற்பயிற்சி செய்யும் உள்ளுறைக் கூடத்தின் உயர்ந்த அவர்களிலே எதிரெதிரே இரண்டு பீச் பழக் கூடைகள்’ (Peach baskets) பொருத்தி வைக்கப் பட்டிருக்கின்றன. அங்குமிங்கும் அலேந்தபடி எதையோ நினைத்துக் கொண்டவர் போல் திரும்பி நடை பழகிக் கொண்டு ஒருவர் இருக்கிறார். அவரை வியப்போடு, மனங் கலந்த மகிழ்வோடு ஆயிரமாயிரங் கண்கள் நோக்குகின்றன. தான் பெற்ற குழந்தையைக் கண்டு மகிழும் தாய் போல அவரின் உள்ளம் களிப்பால் நிரம்பியிருக்கிறது.

அவர்தான், சுவர்களிலே இரு கூடைகளைப் பொருத்திய தன் மூலம், தன் பெயரையும் புகழையும் புவியிலுள்ள மக்களின் உள்ளங்களிலே பொருத்திக் கொண்ட டாக்டர் Gmio io J. G. Hui Hrifij, (Dr. James A. Naismith) GT6rlusuri ஆவார். தன்னுடைய கண்டு பிடிப்பைப் பற்றி அவரே உங்களிடம் கூறுகின்றார், கேளுங்களேன்.

‘நம்மிடையே உலவி வரும் மற்ற விளையாட்டுக்களில் ஒன்றைச் செப்பனிட்டு, உருமாற்றி அமைத்து உள்ளுறை விளையாட்டுக் கூடத்தில் ஆடச் செய்யலாம்; இதல்ை நமது தேவையும் ஆவலும் பூர்த்தி பெறும் என்று முதலில் எண்ணினேன். இதில் தோல்வியுற்ற நான், இறுதியில் மேற் கொள்ளும் முயற்சியையும் கை விடும் நிலைக்கு வந்து விட்டேன். என்றாலும் ஆர்வத்தின் காரணமாக, ஒவ்வொரு ஆட்டத்தின் (Game) அடிப்படை நுண் கருத்தையும் தத்துவத்தையும் ஆராய்ந்தேன். எல்லா ஆட்டங்களிலும் ஒரு வகையான பந்து உபயோகப் படுத்தப்பட்டு வருகிறது” என்பதை உணர்ந்தேன்.

அடுத்து, ஒரு பந்தும் அப் பந்து செல்லக்கூடிய இலக்கு (Goal) ஒன்றும் தேவைப்படுகிறது என்பதைத் தெளிந்தேன். எல்லா ஆட்டத்திலும் இலக்கினுள் பந்தைச் செலுத்த,