பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடைப் பந்தாட்டம் 65

வளர்ச்சியும் பெருமையும் மிகுந்தன. பல நாடுகள் இதில் பங்கு பற்றி ஆடினலும், விதிகள் ஒன்றே, விளையாடும் முறையும் ஒன்றே என்ற அளவில் சிறப்பாக வளர்ச்சியுற்று

வெளி நாடுகளில் தோன்றிய விளையாட்டுக்கள், அந்நாட்டிலிருந்து வெளிநாட்டுக்குச் செல்லும் போர் வீரர்களாலும், பற்று மிகுந்தவர்களாலும், சமயப் பரப்பாளர்களாலும் இன்னும் பிறராலும் விரும்பி எடுத்துச் செல்லப்பட்டன. அதேபோல்தான் கூடைப் பந்தாட்டமும் தன் வெளிநாட்டுப் பயணத்தைத் தொடங்கியது.

அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட சமயப்பரப்பாளர் களுடனே (Missionaries) ஆட்டமும் இந்தியாவை வந்து அடைந்தது. அதனை இளங்கிறித்துவக் கழகத்தார்’ (y.M.C.A.) கல்கத்தாவில் முதன்முறையாக எல்லோருக்கும் அறிமுகப்படுத்தினர்.

ஆனல் முதலில் மக்கள் இந்த ஆட்டத்தை அவ்வளவாக விரும்பவில்லை. ஆட்டம் குழந்தைப் பருவத்தோடே, வளர்ச்சியற்று நின்றுவிட்டது. முதல் உலகப் போருக்கு முன்னரே வந்து சேர்ந்த ஆட்டத்திற்கு, வளர்வதற்குரிய வாய்ப்பும் ஆதரவும் 1932ம் ஆண்டுக்குப் பின்னரே தான் கிட்டியது. அதுவரை ஆட்டம் இந்திய ஒலிம்பிக் கழகத்தாரால் ( C. A.) சரியான முறையில் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையிலே இருந்து வந்திருக்கிறது.

காலம் வளர வளர, ஆட்டத்தின் மீதுண்டான ஒரு இனந்தெரியாத வெறுப்பும் மறைய மறைய, ஆட்டமும் நல்ல நிலையிலே வளர ஆரம்பித்தது. மாநிலக் கூடைப் uff & Tl’ 3, 5p3 fil;6;t (State Basket Ball Associations) ஆங்காங்கே தோன்ற ஆரம்பித்தன. இந்த ஆர்வத்தால் உந்தப்பட்ட நல்ல வளர்ச்சியின் காரணமாக 1934ம் ஆண்டு