பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடைப் பந்தாட்டம் 69

விட்டால், (இரு கைகளிலும் பந்தை வைத்துக் கொண்டு நிற்பது) அவர் மீண்டும் பந்தைத் தட்டிக் கொண்டு ஒட முடியாது. அதல்ை அவருக்கு இரண்டே இரண்டு வழிகள் தான் உண்டு. ஒன்று, தன் குழுவினரில் ஒருவருக்குப் பந்தைக் கொடுத்து விடுவது, அல்லது வளையத்தை நோக்கியெறிந்து வெற்றி எண் பெற முயல்வது. இவ்வாறு அவர் செய்யாவிடில், விதியை (Rule) மீறி

நடந்ததாகக் கருதப்படுவார்.

ஒரு ஆட்டக்காரர் தன் குழுவினருக்குப் பந்தை இப்படித்தான் வழங்க வேண்டும் (Pass) என்று விதிகளில்லை. எப்படி வேண்டுமானலும் தரலாம். கைகளை மேலே groupth, &psrajib (Overhand and Underhand); 5607 வழியாக உருட்டியும், மேலே பந்தை எறிந்தும் (Air and Floor) அல்லது கைகளுக்கு உள்ளேயும் (கொடுத்தோ, திணித்தோ) மாற்றிக் கொள்ளலாம்.

இன்னும், வளையத்திற்குள் பந்தை எப்படி வேண்டு மானுைம் எறியலாம். ஆனல் ஒன்று. விதிகளுக்குட்பட்டு ஆடுகளத்திற்கு உள்ளே இருந்து கொண்டுதான் எறிய வேண்டும். கோட்டிற்கு வெளியேயிருந்து எறியப்படும் பந்து வளையத்தினுள் நுழைந்தாலும், கணக்கில் வெற்றி στGύστ’ சேராது. வளையத்திற்கு மேலாக வந்து வளையத்தினுள் நுழைந்து, அதன் கீழ்ப் பாகத்தில் உள்ள வலை (Net) வழியாகப் பந்து கீழே வந்தால்தான், வெற்றி

எண் கிடைக்கும்.

இவ்வாறு ஒரு முறை வளையத்தில் நுழைந்து வலே வழியாக வெளியே வந்த பந்து வெற்றி எண்ணைக் கொடுத்த பின்னர், அது நிலைப் பந்தாக (dead ball) மாறுகிறது. அதை மீண்டும் ஆடும் பந்தாக மாற்ற, அந்த வளையத் தைக் காக்கும் குழுவினரில் ஒருவர், அவருடைய பகுதியின் கடைக்கோட்டிற்கு வெளியே வந்து நின்று, பந்தை