பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

களுக்கு மேல் எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த விதியை மீறில்ை, உள்ளெறியும் வாய்ப்பு மறு குழுவினருக்குப் போய்ச் சேருகிறது.

4. I 1 b hil sir ? Ls (Dribbling)

தன் கையில் பந்து கிடைத்ததும், முன்னேறிச் சென்று வளையத்திற்குள் எறிய முயற்சிப்பது தான் ஆட்டத்தின் முக்கிய நோக்கம். அதற்காகப் பந்தைக் கையில் வைத்துக் கொண்டு நடக்கவோ ஒடவோ முடியாது. ஆகவே பந்தைத் தரையிலே உருட்டிக் கொண்டோ, மேலாக எறிந்தோ, மேல் கிளம்புமாறு தரையில் அடித்தோ அல்லது தட்டிக் கொண்டு பந்துடன் ஒடியோ தான் முன்னேற வேண்டும். தட்டிக்கொண்டு பந்துடன்ஒடும்பொழுது ஒரு கையால்தான் தட்டவேண்டும் இரண்டு கைகளாலும் பந்தை எப்பொழுது பந்துடன் ஒடும் (Dribbling) பொழுது தொடுகிருனே, அப்பொழுது பந்துடன் ஒடல் முடிவு பெறுகிறது. பின்னர் வளையத்திற்குள் பந்தை எறிவதோ அல்லது தன் குழுவின ரிடம் கொடுப்பதோ என்ற இரு வழிகள்தான் உண்டு.

பந்தைக் கையில் வைத்திருக்கும் பொழுது ஒரு தப்படி (Step) தான் எடுத்து வைக்கலாம். ஆனுல் பந்துடன் ஒடும் பொழுது எத்தனை தப்படி வேண்டுமானுலும் எடுத்து வைக்கலாம்.

5, of 510 (Free Throw)

தடுக்கவும் மறைக்கவும் யாருமே இல்லாது, மற்றவர்கள் துரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருக்க, தனியாக வளையத்தினுள் பந்தை எறிகின்ற வாய்ப்புக்கே தனி எறி’ என்று பெயர். எதிர்க் குழுவினர் ஒருவரை வலிமையாகத் தள்ளியோ, இடித்தோ அல்லது வேண்டுமென்றே வன்மை யாக நடந்துகொண்டு செய்கின்ற தவறுகளுக்குத் தனி எறி யானது தண்டனையாகத் தரப்படுகின்றது.