பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

அளவு உயரம் வைத்து, பந்தை அதிகம் உயராமல் துள்ளச் செய்யும் முறை, விரும்பி ஏற்றுக்கொள்ளப்படுவதாகும்.

இருகைக் கீழ்மாற்றல் போல இந்தத் துள்ளு முறை மாற்றல் தொடங்கி, பந்தை எறிவதற்குப் பதிலாக தரையில் மோதித் துள்ளவிட வேண்டும்.

(ஊ) கொக்கி மாற்றுதல் (Hook Pass)

முன்னே தடுத்து நிற்போர் கைகளுக்கு எட்டாதவாறு பந்தை ஒரு கையால் உயரே தூக்கி, அருகிலே நிற்கும் தன்னுடைய குழுவினருக்குக் கையைக் கொக்கி போல வளைத்து, பந்தை மாற்றுகின்ற முறையே கொக்கி மாற்ற

இடி

லாகும். கையைப் பந்துடன் வளைக்கும்பொழுது கொக்கி போல் இருப்பதால் இப்பெயர் பெற்றிருக்கலாம். இம்முறை, மேலாக மாற்றலைப் போல் அமைந்திருக்கிறது.