பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடைப் பந்தாட்டம 93,

ஆலாக மாற்றும் முறையானது, தூரத்தில் இருப்பவர் களுக்குப் பந்தை எறிந்து கொடுக்கப் பயன்படுவதாகும். ஒதாக்கி மாற்றல் முறை மிகவும் அருகாமையில் உள்ள தன் குழுவினருக்குக் கை மாற்றித் தர உதவுகிறது.

பந்தை மாற்றி (Pass) ஆடுகின்ற முறைகளில் மேற். கூறியவைகள் எல்லாம் முக்கியமானவைகளாகும். ஆட்டத் தைத் தொடர்ந்து ஆடும்பொழுது. மேற்கூறப்பட்ட மாற்று முறைகள் எளிதாகவும். சரியாகவும் வரக்கூடும். இத்தகைய மாற்று முறைகளில் சிறந்தால். சிறந்த ஆட்டக்காரராக மாறலாம். அதிகப் பயிற்சியினல் இன்னும் புதிய மாற் று. முறைகளும் தோன்றக்கூடும். பெறுக பயனடைக என்று வாழ்த்துகிருேம். --

Liz III_55I PL50 (Dribbling)

இதுவரை கூறிவந்த திறன் நுணுக்கங்கள் எல்லாம் ஆட்டக்காரர்கள் பந்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் (Control) கொண்டு வருவதற்கு உதவி செய்வதாகும். இனி, பந்து கைவசம் இருக்கும்போது, உடலை, உடல் அசைவை, எவ்வாறு கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என்ற முறையை அறிந்து கொள்வதும் சாலச் சிறந்ததாகும்.

பந்துடன் முன்னேறிச் செல்வது என்றால் பந்துடன் நடப்பதல்ல. ஒடுவதும் அல்ல; பந்தைத் தரையில் தட்டி அது துள்ளி மேலே எழும்போது, மீண்டும் தட்டிக்கொண்டே முன்னேறுவதுதான். அப்படி வேகமாக ஒடும்பொழுது பந்தும், நம் நினைவுப்படி நெளிந்து கொடுக்கும் உடலும். நம் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தால்தான் பந்துடன் ஒடமுடியும்.

பந்தைத் தட்டிக்கொண்டு ஓடுதல், முதன் முதலில் எளிதன்று. நம் கையிலுள்ள மணிக்கட்டின் வலிவுடன் விரிக்கப்பட்ட விரல்களால்-உடலை சிறிது தரையை நோக்கி