பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 119

(ஆ) உடம்பின் பாகங்களைப் பந்துத் தொட்டாலும், எல்லாம் ஒரேசமயத்தில் தொட்டதாக இருக்க வேண்டும். பலமுறை உடம்பில் பட்டுத் தெறிக்கக் கூடாது.

(இ) ஆடும் பொழுது பந்தைத் தானே தொட்டாலும் அல்லது பந்து அவரின் மேல் வந்து விழுந்தாலும் அந்த ஆட்டக்காரர் பந்தைத் தொட்டு விளையாடியதாகவே கருதப்படுவார்.

(ஈ) ஆட்டக்காரரின் கைகளிலோ அல்லது உள்ளங்கைகளிலோ விநாடிப் பொழுது பந்து தேக்கமுற்று நின்றாலும், அவர் பந்தைப் பிடித்ததாக (Catching) கருதப்படுவார். பந்து தெளிவாக அடிக்கப்பட வேண்டும். கைகளில் ஏந்துதல் (Scooping) மெதுவாகத் தாங்கி உயர்த்துதல் (Lifting), பந்துடன் கைகளைக் கொண்டு செல்லுதல் (Showing) போன்ற பந்தை விளையாடுகிற முறைகளெல்லாம் பந்தைத் தேக்கியதென்றே கருதப்படும்.

இரண்டு கைகளாலும் அடிக்கப்படும் பந்து, தவறல்ல அது சரியே.

(உ) மற்ற ஆட்டக்காரர் அந்நேரத்தில் பந்தைத் தொடா மலிருக்கும் பொழுது, உடம்பில் எந்தப் பாகங்களிலாவது ஒருமுறைக்கு மேல் பந்தைத் தொடுவதை பலமுறை ஆடுதல் (Dribling) என்று கூறப்படும்.

(ஊ) மூடிய கைகளினாலோ அல்லது முன் கைகளினாலோதான், முதன் முறையாக பந்தை எடுத்தாட வேண்டும். (Under arm Pass) முதல் முறையாக எடுத்தாட அல்லது வழங்க எந்த முறையேனும் பின்பற்றலாம் (ஆனால் தவறு நேராதிருக்க, மூடிய கைகளில் எடுத்தாடுதல் தான் நல்லது)

2. இருவராடும் ஆட்டம்

(அ) எதிரெதிராக ஆடும் ஆட்டக்காரர்கள் இருவர், வலைக்கு மேலே பந்தை வைத்து ஒரே சமயத்தில் சேர்ந்தாற்போல் விளையாடினால், எந்தப் பக்கத்தில் பந்து விழுகிறதோ, அந்தக் குழு ஆட்டக்காரரே கடைசியாகப் பந்தை அடித்தார் என்று கருதப்படுவார். இரு எதிராளிகள் சேர்ந்தாற்போல் பந்தை அடித்த பிறகு பந்து வந்து விழுகின்ற பக்கத்தில் உள்ள குழுவினருக்கு 3 முறைப் பந்தைத் தொட்டு விளையாடுகின்ற உரிமை உண்டு.

எதிராளிகள் இருவரும் சேர்ந்தாற்போல் ஆடிய பந்தானது, ஆடுகள எல்லைக்குள் (Court) விழுந்தால், அந்தப் பக்கத்தில் உள்ள