பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 விளையாட்டுக்களின் விதிகள்

குழுவினர் தவறியவர்களாவார்கள் (Fault). ஆடுகள எல்லைக்கு வெளியே விழுந்தால், அடுத்த குழுவினர் தவறியவர்களாவார்கள்.

எதிராளிகள் இருவராலும் பந்து சேர்ந்தாற்போல் பிடிக்கப் பட்டால் (Held) அது இரட்டைத் தவறாகும் (Double Fault). அதற்குப் பின் ஆட்டம் மறுபடியும் ஆடப்படும்.

(ஆ) ஒரே குழுவில் - இருவர் ஒரே குழுவைச் சேர்ந்த ஆட்டக்காரர் இருவரும் ஒரே பந்தை ஆடும் பொழுது அவர்களில் ஒருவர்தான் பந்தைத் தொட்டு விளையாடினார் என்றால் பந்தை ஒரு முறைத் தொட்டதாகத்தான் கருதப்படுவார் (Onetouch).

தன் குழுவினரில் ஒருவரைத் தொட்டுக் கொண்டோ அல்லது தள்ளிக் கொண்டோ மறுபக்கம் பந்தை அனுப்பலாம். ஆனால் பந்தை அனுப்புவதற்காக, மற்றவன் மேல் சாய்ந்து அவனை ஒரு உதவி சாதனமாகப் பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு பாங்கர் உதவி செய்வது, அவனைத் தவறு செய்யத் தூண்டிய குற்றமாகும்.

இதற்கு மாறாக, ஒரே குழுவைச் சேர்ந்த இருவர் சேர்ந்தாற்போல் பந்தைத் தொட்டால் அவர்கள் இருவரும் பந்தைத் தொட்டு விளையாடியதாகவே (இருமுறைத் தொட்டதாகவே) (Double Touch) கருதப்படுவார்.

(இ) இரட்டைத் தவறு (Double Foul) எதிராளிகள் இருவர் சேர்ந்தாற்போல் தனித்தனியே தவறு செய்தால் (Personal Fault) அதே வெற்றி எண்ணுக்காக ஆட்டம் மறுபடியும் ஆடப்படும்.

(ஈ) தடுத்தாடுதல் (Blocking) வலைக்குமேல் பந்தை வைத்து எதிராளி தாக்கி அடிக்கிற பந்தை, தன் உடம்பின் எந்த பாகத்தினாலாவது முயற்சியுடன் பந்தைத் தடுத்தாடும் செயலுக்கே தடுத்தாடுதல் என்று பெயர்.

(உ) தடுப்பதில் முன் வரிசையில் உள்ள எந்த ஆட்டக்காரரும் பங்கு பெறலாம். தடுப்பதில் பங்கு பெறும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆட்டக்காரர்களையோ பந்து தொட்டாலும் ஒருமுறை பந்தைத் தொட்டதாகவே கருதப்படும். தடுப்பதில் பங்கு பெற்றவர்கள் மீண்டும் பந்தை எடுத்து விளையாடலாம். ஆனால் அடிக்கப்படும் பந்தானது உடனே எதிர்க்குழுவிற்கு அனுப்பப்ப்டக் கூடாது. (அதாவது தடுப்பில் பங்கு பெற்றவர்கள் அந்தப் பந்தை அடிக்கவோ (Smashing) அல்லது இடம் பார்த்துப் போடவோ (Placing) கூடாது. ஆனால் மற்றவர்கள் எப்படியேனும் பந்தை மறு பக்கத்திற்கு அனுப்பலாம்) தடுத்தலுக்குப் பின் தாம் பெறும் பந்தை அக்குழு மூன்று முறை ஆடலாம்.