பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 123

9. வலைக்கு மேலே கைகளை நீட்டி எதிர்க்குழுப் பக்கத்திலுள்ள பந்தைத் தொட்டுவிடுதல்.

10. பின் வரிசை ஆட்டக்காரர் தாக்கும் எல்லைக்குள்ளே (வந்து) இருந்துகொண்டு தவறான நிலையில் எதிர்க்குழு பக்கத்திற்குப் பந்தை அனுப்புதல். - - 11. ஆடுகளத்தின் அகலத்தைக் குறிக்கின்ற வலையின் பக்க நாடாக்களுக்கு வெளியே, வலையை கடந்து பந்து செல்லுதல்.

12. ஆட்டத்திற்கு வெளியேயுள்ள பந்து, வலைக்குக் கீழே செல்லும் பந்து, ஆடுகளத்திற்கு வெளியேயுள்ள பொருட்களைத் தொட்டுவிட்ட பந்து தன்னுடைய குழுவினர் ஒருவரின் உதவியுடன் அனுப்பப்பட்ட பந்து தவறானதாகும். பந்தைத் தொட்டு ஆடிய ஒரு ஆட்டக்காரர் கம்பத்தைத் தொடலாம். அது தவறல்ல.

13. ஒரு ஆட்டக்காரர் தனியாக எச்சரிக்கப்படுதல் (Personal Warning). -

14.நடுவரிடமிருந்து முதல் எச்சரிக்கை பெற்ற பிறகும் ஒரு குழு அல்லது அதன் மேலாளர்அல்லது பயிற்சியாளர் அல்லது மாற்றாட்டக் காரர்கள் இவர்களிடமிருந்து வெளிப்படையாகக் குறிப்புரை (Coaching) @Lg)360.

15. இரண்டு எதிராளிகள் ஒரு தவற்றைச் செய்யுமிடத்து, முதன் முதலாக செய்தவரின் தவறே கணக்கிடப்படும். அந்தத் தவறுகள் சேர்ந்தாற் போல் இருவராலும் செய்யப்பட்டிருந்தால், மறுமுறையும் பந்து அதே வெற்றி எண்ணுக்காக ஆடப்படும்.

16. எதிர்க்குழுவினரின் பக்கத்தில் பந்து ஆடப்படும் பொழுது, வலைக்குக் கீழாக சென்று பந்தைத் தொடுவதும் அல்லது எதிர்க்குழுவினரைத் தொடுவதும் தவறாகும். வலைக்குக் கீழாக, நடுக்கோட்டைக் கடந்து உடம்பு உள்ளே சென்றாலும், மறுபக்கத்தின் தரையைத் தொடாமலும் அல்லது எதிர்க்குழுவினரைத்தொடாமலும் இருந்தால், அது தவறல்ல.

17. பிடிவாதமாக இருந்துகொண்டு ஆட்டத்தைத் தாமதப் படுத்துதல்.

18. முறையற்ற வழியில் ஒரு ஆட்டக்காரரை மாற்றுதல் (Replacing).

19.முதல் எச்சரிக்கைக்குப் பிறகு ஓய்வுக்காக 3-வது முறை ஓய்வு -

நேரம் கேட்டல்.