பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 விளையாட்டுக்களின் விதிகள் >

எல்லோருக்கும் தலைவராக அவர் இருப்பார். எந்தக் காரணம் பற்றியாவது, ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டிருந்தாலும் அவருடைய அதிகாரம் அங்கும் விரவி நிற்கும். விதிகளில் குறிப்பிடப்படாத எல்லாவிதமான இக்கட்டான சூழ்நிலைகளுக்கும் ஒரு முடிவு காண, இவருக்குப் பூரண அதிகாரம் உண்டு. மற்ற உதவியாளர்கள் எடுத்த முடிவுகள் தவறு என்று இவருக்குப் பட்டால், அதையும் இவரால் மாற்ற முடியும். இவர் ஒரு ஓரத்தில் வலையிலிருந்து 50 செ.மீ. தூரத்தில் உயரே அமர்ந்து கொண்டு, ஆட்டத்தைக் கண்காணித்துக் கொண்டிருப்பார்.

ஆட்டக்காரர்கள் விதிகளை மீறினால், அதற்குரிய தண்டனையை இவர் உடனே கொடுத்து விடுவார். 2. துணை நடுவர் (Umpire)

முதல் நடுவர் அமர்ந்திருக்கும் இடத்திற்கு எதிர்ப்பக்கத்தில் இரண்டாம் நடுவர் (Second Referee) இருப்பார். அவருடைய இயக்கம் (Movement) பக்கக்கோடுகள் வழியாகவே இருக்கும். அடித்தெறிகின்ற குழுவிற்கு எதிர்ப்பக்கமாக உள்ள அடுத்த குழுவினரின் பக்கக் கோட்டுப் பகுதியில் நிற்பதோடு, அடித்தெறிதல் மாறுகிறபொழுது இவரும் இடம் மாறி நின்று ஆட்டத்தைக் கீழே காணும் முறைகளில் கண்காணிக்க வேண்டும்.

(அ) வலைக்குக் கீழேயுள்ள நடுக்கோட்டைக் கடந்து செல்வதாலும், தாக்கும் கோட்டைக் கடந்து விடுவதிலுமான ஆட்டக்காரர்களின் எல்லாவிதமான தவறுகளையும் கண்டு, எல்லாவற்றிற்கும் முடிவை இவரே எடுக்கிறார்.

(ஆ) வலைக்கு மறுபுறம் பந்து செல்வதையும், இன்னும் வலையின் பக்கத்தில் கட்டப்பட்டிருக்கும் நாடாவுக்கு வெளியே பந்து செல்வதையும் இவர் சுட்டிக் காட்டுகிறார்.

(இ) ஓய்வு நேரத்திற்கான நேரத்தை இவர் கண்காணிக்கிறார்.

(ஈ) தன் அருகிலேயே அமர்ந்திருக்கும் குழுப் பயிற்சியாளர்கள், மாற்றாட்டக்காரர்கள் இவர்களைத் தன் கட்டுப்பாட்டக்குள்ளே வைத்திருக்கிறார்.

(உ) குழுத் தலைவன் அல்லது பயிற்சியாளர் கேட்டுக் கொள்கின்ற மாற்றாள் முறைக்கு இவர் அனுமதி தருகிறார்.

(ஊ) வலையின் மேல் பாகத்தை அல்லது வலைக்கு நேராக உள்ள நாடாவைப் பந்து தொடுவதைத் தவிர, மற்ற சமயங்களில் வலையைத் தொடுவதினால் உண்டாகும் தவறுகளை எல்லாம் இவர் கவனித்துக் கொள்கிறார்.