பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

rs’ டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா - 13

பயன்கள்: இந்தப் பரப்பு கீழே காணும் செயல்களுக்காகப் பயன்படுகிறது. - - 1. இலக்குக் காவலன் பந்தைப் பிடித்துத் தன் வசம் வைத்திருக்கும் பொழுது (விதியை மீறாது) மெதுவாக இடிக்கப் படலாம். அதாவது, இடிப்பது பந்துடனே சேர்ந்தாற்போல் இருக்க வேண்டும். பந்தைப் பிடிக்காமலும் இந்தப் பரப்பினுள்ளே நின்று கொண்டிருக்கும்வரை, இலக்குக் காவலனுக்கு விதிகளின் துணை என்றுமே உண்டு. - H

2. இது குறியுதை (Goal-Kick) எடுக்க வேண்டிய எல்லையைக் கட்டுப்படுத்துகின்றது.

(ஆ) ஒறுநிலைப் பரப்பும், ஒறுநிலை வளைவும் (PenaltyArea and Penalty Arc) ஒவ்வொரு இலக்குக் கம்பத்தில் இருந்தும் ஒவ்வொரு பக்கத்திலும் கடைக்கோட்டில் 18 கெச தூரம் தள்ளி, நேராக இழுத்துப் பின் செங்குத்தாக ஆடுகளத்தினுள், 18கெசதுரம் உள்ள கோடொன்றை இழுக்க வேண்டும். இவ்வாறு இழுக்கப்பட்ட இருகோடுகளின் முனைகளும், ஆடுகளத்தின் உள்ளே கடைக் கோட்டிற்கு இணையாக இணைக்கப்பட வேண்டும். இதற்கு இடையில் ஏற்படுகின்ற பரப்பே ஒறுநிலைப் பரப்பாகும் (படம் காண்க).

இலக்குக் கம்பங்களுக்கு இடைப்பட்டக் கடைக்கோட்டின் மையப் புள்ளியில் இருந்து 12கெசதுரத்தில் ஆடுகளத்தின் உள்ளே ஒரு ஒறுநிலைப் புள்ளியைக் குறிக்க வேண்டும். அந்த இடமே ஒறுநிலைப் புள்ளி (Penalty kick-mark) எனப்படும். ஒவ்வொரு ஒறுநிலைப் புள்ளியில் இருந்தும் 10 கெசநீள ஆரம் உள்ள வளைவு ஒன்று ஆடுகளத்தின் உள்ளே அதாவது ஒறுநிலைப் பரப்பிற்கு வெளியே இழுக்கப்பட்டிருப்பதற்கு ஒறுநிலை வளைவு என்று பெயர். பயன்கள்: 1. தவிர்க்கப்பட்ட ஒன்பது குற்றங்களில் (Nine ofences) (பகுதி5-ல் 1-ம் பிரிவு) ஏதாவது ஒன்றை வேண்டுமென்றே தடுக்கும் குழுவினர் (தாக்கும் குழுவினருக்கு). இப்பகுதியில் செய்தால், ஒறுநிலை உதையைத் (Penalty-Kick) தங்களுக்குத் தண்டனையாகப் பெறுவர்.

  • - 2. இலக்குக் காவலன் கைகளினால் பந்தைப் பிடிக்கலாம் என்ற

ஒரு எல்லையை, இப்பகுதி நிர்ணயித்துக் காட்டுகிறது.

3. குறி உதையால் இலக்குப் பரப்பில் இருந்து உதைக்கப்படும் பந்து, மற்றவர்களால் தொட்டு ஆடப்படும் முன், இப்பரப்பிற்கு வெளியே சென்றிருக்க வேண்டும். குறி உதையால் வரும் பந்தை