பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|') () விளையாட்டுக்களின் விதிகள்

ஒவ்வொரு பகுதியின் (Court) முடிவில் வலைக்கோட்டிற்கு இணையாக 12 மீட்டர் தூரத்தில் கிழிக்கப்பட்டிருக்கின்ற கோட்டுக்கு எல்லைக்கோடுகள் (Boundary lines) என்று பெயர். எல்லைக் கோடுகளின் மூலைகள் பக்கக் கோடுகளுடன் இணைக்கப் பட்டிருக்கின்றன. - -

வலைக்கோட்டுக்கு இணையாக 1 மீட்டர் நீளத்தில் ஒவ்வொரு பகுதியிலும் கிழிக்கப்பட்டிருக்கின்ற கோட்டுக்கு அடித்தெறியும் அடையாள எல்லைகள் (Serving Crease Lines) என்று பெயர். அடித்தெறியும் அடையாள எல்லைக்கோட்டின் சரி பாதியில் பக்க கோட்டிற்கு இணையாகக் கிழிக்கப்பட்டிருக்கும் கோட்டுக்கு நடுக்கோடு (Centre Line) என்று பெயர்.

- இந்த நடுக்கோடு, அடித்தெறியும் அடையாள எல்லைகளை இரண்டு சரிபாதியாகக் கூறுபடுத்தி, ஆடுகளத்தை வல இடப்பகுதி (Right and Left Court) 6T60s 976&TLI&L 1%lsllsspg).

2. வலையினுடைய உச்சியின் உயரம் நடுவில் 1.83 சென்டி மீட்டர் ஆகவும், கம்பங்களுக்கு அருகில் 1.85 சென்டிமீட்டர்ஆகவும், இருக்க வேண்டும். - -

2. ஆட்டக்காரர்களும் - பந்தும்

1. ஒரு குழுவுக்கு 8 ஆட்டக்காரர்கள் உண்டு. அதில் 5 ஆட்டக்காரர்கள் களம் இறங்குவார்கள். இரு குழுக்களினால் இந்த ஆட்டம் ஆடப்படுகிறது. ஒரு ஆட்டம் 29 வெற்றி எண்களைக் கொண்டது. 3-ல் 2 ஆட்டங்களில் வெற்றி பெறுபவரே வென்றவராவார். -

2. பந்தாடும் மட்டையின் எடை 200 கிராம் முதல் 250 கிராம் வரை, மட்டையின் நீளம் 63 சென்டிமீட்டர் முதல் 70 சென்டிமீட்டர்

வரை, பந்தடித்து ஆடும் தலைப்பகுதியின் நீளம் 24 முதல் 27 சென்டி மீட்டர் அகலம் 20 முதல் 23 சென்டி மீட்டர் வரை.

3. பந்து: பந்தின் நிறம் மஞ்சள், பந்தின் எடை 22 கிராம் முதல் 23 கிராம் வரை, பந்தின் விட்டம் 4 சென்டிமீட்டர் குறையாமல், 5.5. சென்டிமீட்டருக்கு மிகாமல் பூப்பந்து இருக்க வேண்டும். - 3. விளையாடும் முறைகள் - 1. ஆட்டம் (The Play): பந்தை அடித்து எறிதல் என்பது ஒரு

பகுதியில் வலது அல்லது இடப் பக்கத்தில் இருந்து, மறுபகுதியில் உள்ள எதிர் மூலைவிட்டமாக அமைந்துள்ள (Diagonally) இடத்தில்,