பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 179

2. ஆட்டக்காரர்கள் நின்றாடும் வரிசை முறை

ஆட்டக்காரர்கள் இடம் மாற்றி ஆடுதல் முறையும் Z முறையில் அமைக்கப்பட்டுள்ளது. 7-ஆம் நிலையில் உள்ள ஆட்டக்காரர் பந்தெறியும் வாய்ப்பைப் பெறுவார்.

ஆட்டம் தொடங்கும் முறை

1. ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக ஆடுகளத்தின் ஒரு

பக்கமா அல்லது சர்வீஸ் வாய்ப்பா என்பதை நாணயம் சுண்டி தீர்மானிப்பர்.

2. ஆட்டக்காரர்கள் Z அமைப்பில் நிற்க வேண்டும். 3. ஒரு முறை ஆட்டத்தில் (Set) ஆடும் ஆட்டக்காரர்கள் தங்கள் இடங்களை மாற்றக் கூடாது. இடம் மாற்றி ஆடுதல் (Rotation) பிறிதொரு முறை ஆட்டத்தில் (Subsequent set) ஆட்டக்காரர்கள் இடங்களை மாற்றிக் கொள்ளலாம்.

3. பந்து ஆட்டமிழக்கும் நிலை 1. பொதுவிடத்தின் கோட்டில் அல்லது பொதுவிடத்திற்குள் பந்து விழும்போது ஆட்டமிழக்கும்.

2. ஆடுகளத்தில் ஆடும் ஆட்டக்காரர் மேல் படாமல் பந்தானது ஆடுகளத்தின் வெளியே விழும்போது ஆட்டமிழக்கும்.

3. ஆன்டெனா மீது படும் பந்து ஆட்டமிழக்கும்.

4. வெற்றி எண் பெறும் முறை

1. ஒரு அணி மூன்று முறை ஆட்டத்தில் (3 Sets) ஏதேனும் இரண்டு முறை ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும்.

2. ஒரு முறை ஆட்டத்தை வெல்ல 21 வெற்றி எண்கள் எடுக்க வேண்டும்.

3.20-20 என்று இரு அணிகளும் சமநிலைப்பட்டால் கூடுதலாக 2வெற்றி எண்களை பெறும் அணியே வெல்லும் (23-21).

4. எந்த அணி முதலில் 23 வெற்றி எண்களைப் பெறுகிறதோ அதுவே வென்றதாக அறிவிக்கப்படும்.