பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 1.4 விளையாட்டுக்களின் விதிகள் ‘’

அதனால் அயலிடம் ஆகிவிடுவதால், அதற்குத் தண்டனையாக அந்தக் குறிப்பிட்ட எல்லையில் ஆட இருக்கும் இருவருக்காக, நடுத்திடலில் இருந்து பந்தைமேல் எறி எடுக்க, ஆட்டம் தொடங்கும். 2. ஆடுகளத்திற்கு வெளியே பந்து சென்றால்

கீழே காணும் காரணங்களுக்காக, பந்து ஆடுகளத்திற்கு வெளியே (Outof court) சென்றுவிட்டதாகக் கருதப்படும்.

ஆடுகளத்திற்கு வெளியேயுள்ள தரையை (எல்லைக் கோட்டைக் கடந்து) பந்து தொட்டுவிட்டால்:

ஆடுகளத்தின் எல்லைக் கோட்டுக்கு வெளியேயுள்ள பொருளையாவது ஆட்களையாவது பந்து தொட்டுவிட்டால்;

ஆடுகளத்தின் எல்லைக் கோட்டுக்கு வெளியே நிற்கும் ஒரு ஆட்டக்காரர் பந்தைப் பிடித்துக் கொண்டிருந்தால்;

ஆனால், இலக்குக் கோட்டின் மேல்நிற்கும் இலக்குக் கம்பத்தின் எந்தப் பகுதியில் பட்டு, ஆடுகளத்திற்குள் பந்து மீண்டும் திரும்பி வந்தாலும், அது ளிெயே சென்றதாகக் கருதப்பட மாட்டாது. அதிலிருந்தே ஆட்டம் தொடரும்.

ஆடுகள எல்லையை விட்டு, வெளித்தரையை மிதித்துக் கொண்டு, பந்தைத் தொட்டாடுகின்ற (Contact) ஒரு ஆட்டக்காரர். ஆடுகள எல்லைக்கு வெளியே இருக்கும் பொருளையோ அல்லது ஆளையோ தொட்டுத் தொடர்பு கொண்டுள்ள ஒரு ஆட்டக்காரர்.

ஆடுகளத்தில் பந்துடன் இருக்கும் தொடர்புகொண்டிருந்தால்

= கூட, பந்து ஆடுகளத்திற்கு வெளியே இருக்கிறது என்றே கருதப்படும்.

அவரும் ஆடுகளத்திற்கு வெளியே இருப்பதாகத்தான் கருதப்படுவார். பந்துடன் தொடர்பு இல்லாத பொழுது, ஒரு ஆட்டக்காரர் ஆடுகளத்திற்கு வெளியே நிற்கலாம். அல்லது வெளியே போகலாம். ஆனால், ஆடுகளத்தின் எல்லையை விட்டு, வெளித் தரையை மிதித்துக் கொண்டு நிற்கும்போது, பந்தை விளையாடுவதற்காகவோ, தாண்டவோ அல்லது முயற்சி செய்யவோ கூடாது.

3. உள்ளெறிதல்

பந்து ஆடுகளத்தை விட்டு வெளியே போவதற்கு முன், கடைசியாகப் பந்தைத் தொட்டாடித் தொடர்பு கொண்டவர்; அல்லது

ஆடுகளத்தின் எல்லைக்கு அப்பால் உள்ள வெளித்தரையை மிதித்துக் கொண்டிருந்தவாறு பந்தைப் பிடித்து ஆடுகின்றவர், பந்து