பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 195

ஆடுகளத்தை விட்டு வெளியே போவதற்குக் காரணமான

தவறிழைத்தவர் ஆகிறார். ஆகவே, அதற்குத்தண்டனையாக, அவரது எதிர்க்குழுவைச் சேர்ந்த ஒருவருக்குப் பந்தை உள்ளெறியும் (Throwin) வாய்ப்பு கிடைக்கிறது. - - -

1. பந்தை உள்ளெறியும் வாய்ப்பினைப் பெற்ற ஆட்டக்காரர்

(அ) எந்தக் கோட்டைக் கடந்து பந்து சென்றதோ அந்த

இடத்திற்குப்போய், அந்தக் கோட்டின் பின்னால் நின்று, பந்தை

உடனே உள்ளெறிய வேண்டும்.

(ஆ) பந்தை எறிவதற்கு முன், நிறுத்தி (Pause) அதாவது சற்று காலம் தாழ்த்தி எறிய வேண்டும். -

(இ) ஆடுகளத்தினுள்ளே இருக்கும் ஆட்டக்காரர்கள் அனைவருக்கும் நடுவர் குறிப்பிட்டு அறிவுறுத்தியபின், விசில் மூலம் சைகை கிடைத்தவுடன் 3 விநாடிகளுக்குள் பந்தை உள்ளெறிய வேண்டும். -

(ஈ) பந்து தனது கைகளை விட்டுப் புறப்பட்டுப் போகுமுன், உள்ளெறிபவர் ஆடுகளத்திற்குள் வரக் கூடாது. (அதாவது தன் கையை விட்டுப் பந்து நீங்கிய உடனே உள்ளுக்குள்ளே வரலாம்.)

2. இலக்குக் கோடுகளுக்குப் பின்னால் இருந்து உள்ளெறிய வேண்டுமென்றால், அதற்கு முன்னால் உள்ள இலக்குத் திடலுக்குள்ளே (Goal Third) தான் எறிய வேண்டும்.

பக்கக் கோடுகளுக்குப்பின்னால் உள்ளெறிய வேண்டுமானால், மிக அருகாமையிலுள்ள அதாவது அதனைச் சார்ந்து தொடர்ச்சியாக உள்ள திடலுக்குள் (Third) தான் எறிய வேண்டும்.

3. தான் ஆடுகின்ற எல்லைப் பரப்பினைக் குறிக்கும் கோட்டுக்குப் பின்னாலிருந்துதான் பந்தை உள்ளெறிய வேண்டும்.

இதில் ஒரு விதிவிலக்கு உண்டு.

இலக்கினுள் எறிய முயன்று தோற்று, அதன் காரணமாக பந்து ஆடுகளத்தை விட்டு வெளியே போய்விடுகிறதென்றால், அந்தப் பந்து வேறு யாராலும் தொடப்படாமல் அல்லது விளையாடப்படாமல் வெளியே போய்விடுகிறதென்றால், இலக்கு வட்டம் (Goal circle) குறித்துக் காட்டுகின்ற அளவுள்ள இலக்குக் கோட்டுக்குப் பின்னால் சென்று, நின்று பந்தை எறிய வேண்டும்.

(அந்த இலக்கினைக் காக்கும் குழுதான், இப்பொழுது பந்தை உள்ளெறியும் வாய்ப்பினைப் பெறும். எதிர்க்குழு அல்ல.)