பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 விளையாட்டுக்களின் விதிகள் - >

தண்டனை: தனி.எறி வழங்கும் வாய்ப்பான தண்டனை கிடைத்தால் தவிர, உள்ளெறிதலை எதிர்க்குழுவே நிகழ்த்தும்.

- -- எதிரெதிர்க் குழுவைச் சேர்ந்த இரண்டு ஆட்டக்காரர்கள் ஒரே சமயத்தில், வெளியே செல்லுமாறு பந்தை விளையாடியிருந்தால், யார் கடைசியாகப் பந்தை விளையாடி அனுப்பினார் என்பதை நடுவரால் நிச்சயமாகக் கண்டுபிடிப்பது கடினமானதாக இருந்தால், பந்து வெளியே சென்ற திசைக்கு எதிர்ப்புறம் வைத்து, மேல் எறி வாய்ப்பை வழங்கி, அதில் இருவரையும் ஆடச்செய்து, ஆட்டத்தைத் தொடங்கி வைப்பார். . -

உள்ளெறியும்போது, யாராலும் பந்து தொடப்படாமலோ அல்லது விளையாடப்படாமலோ வெளியே சென்றுவிட்டால், பந்து கடைசியாக வெளியே சென்ற இடத்திலிருந்து, உள்ளெறிதலைச் செய்ய வேண்டும். - - 4. மேலெறிதல்

மேல் எறியும் (Throw-up) முறையானது, மீண்டும் பந்தை ஆட்டத்தில் இட்டுத் தொடரும் வாய்ப்பை அளிக்கிறது. அவ்வாறு மேல் எறி நிகழ்த்துவதற்காகக் கீழ்வரும் காரணங்கள் அமைகின்றன. (அ) ஒரு கையால் அல்லது இரு கைகளால், எதிரெதிர்க் குழுவைச் சேர்ந்த இரண்டு ஆட்டக்காரர்கள், ஒரே சமயத்தில் பந்தைப் பிடித்து (தம் வசமிருப்பது போல) வைத்துக் கொண்டிருத்தல். -

(ஆ) எதிரெதிர்க் குழுவைச் சேர்ந்த இரண்டு ஆட்டக்காரர்கள், ஒரேசமயத்தில் பந்தை அடித்து, ஆடுகளத்திற்கு வெளியே அனுப்பி வைத்தல். -

(இ) ஒரு ஆட்டக்காரர் பந்தை வைத்துக் கொண்டும், இன்னொரு ஆட்டக்காரர் பந்தைத் தொட்டுக் கொண்டும் எதிரெதிர்க் குழுவைச் சேர்ந்த அந்த இரண்டு ஆட்டக்காரர்களும் ஒரேசமயத்தில் அயலிடம் (Of-side) ஆகியிருத்தல். -

(ஈ) பந்தைத் தங்கள் வசமாக்கிக் கொள்ளும் பெருமுயற்சியில், எதிரெதிர்க் குழுவைச் சேர்ந்த இரண்டு ஆட்டக்காரர்களும், ஒருவர் மேல் ஒருவர் இடித்துக் கொள்வதுபோல உடல் தொடர்பு Q&mreogo (Contact).

(உ) ஆடுகளத்தை விட்டு பந்து வெளியே செல்வதற்கு முன் யார் பந்தைக் கடைசியாகத் தொட்டு விளையாடினார் என்பதை நடுவரால் நிச்சயமாகக் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும்பொழுது,