பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 -- டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 213

கபாடி ஆட்டம் “குடுகுடு டுடு சடுகுடு” என்று பொதுவாக அழைக்கப்படுகின்ற கபடி ஆட்டம், கீழ்க்கண்ட விதிகளினால் கட்டுப்படுத்தப்பட்டு ஆடப்படுகிறது. - -

1. ஆடுகளத்தின் அமைப்பு (1) கபாடி ஆடுகளமானது, சமதரையாகவு ம், இயன்றவரை மென்தரையாகவும், உரப்பொருளாலும் மரத்துளாலும் அமைக்கப் பட்டிருக்க வேண்டும். -

ஆண்கள் விளையாடுவதற்குரிய ஆடுகளமானது 1250 மீட்டர் நீளமும், 10 மீட்டர் அகலம் கொண்டதாகவும் இருக்கும். சரியாக நீளப்பகுதியின் இடையில்குறிக்கப்பட்டு, இரண்டாகப்பிரிக்கப்படும் ஆடுகளத்தின் ஒவ்வொரு பகுதியும் (Half) 6.25 மீட்டர் நீளமும், 10 மீட்டர் அகலமும் கொண்டதாக விளங்கும்.

பெண்களுக்கும், 57 கிலோகிராம் எடைக்கும் குறைந்த ஆண்கள்

ஆடும் ஆடுகளத்தின் அளவானது, 11 மீட்டர் நீளமும், 8 மீட்டர்

அகலமும் கொண்டதாக இருக்கும். இரண்டாகப் பிரிக்கப்படும் ஆடுகளத்தின் ஒரு பகுதியின் அளவு 5.50 மீட்டர் நீளம் x8 மீட்டர் அகலம் கொண்டதாக விளங்கும். . . . . . . . -

(2) ஆடுகளத்தின் இரு புறங்களிலும் 1 மீட்டர் அகலத்தில் துண்டாகக் காணப்படும் பகுதிகள் தொடரிடம் (Lobby) என்று அழைக்கப்படும். . . . - --

(3) பாடித் தொடும் கோடு என்பது (Baulk Line) அந்த நடுக்கோட்டிலிருந்து ஆடுகளத்தின் இருபுறமும் நடுக்கோட்டிற்கு இணையாகக் கிழிக்கப்பட்டு இருக்கும்.

ஆண்களுக்கான ஆடுகளத்தில் நடுக்கோட்டிலிருந்து 3.25 - மீட்டர் தூரமும், பெண்கள் அல்லது 57 கிலோ கிராம் எடைக்குக் குறைந்த ஆண்களுக்கான ஆடுகளத்தில் 2.25 மீட்டர் தூரத்திலும், தொடர்ப் பகுதியைத் தவிர, கோடுகள் கிழிக்கப்பட்டிருக்க வேண்டும். (படம் காண்க) o

(4) ஆடுகளத்தின் எல்லைகளையும், பிற பகுதிகளையும் குறித்துக் காட்டுகின்ற கோடுகள் அனைத்தும் தெளிவாகவும் 2 அங்குலத்திற்கு (5 செ.மீ) மிகாமலும் இருக்க வேண்டும்.

-