பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 225

(இ) ஒரு குழுவைச் சேர்ந்த ஏதாவது ஒரு ஆட்டக்காரர் எடுத்த எல்லா வெற்றி எண்களையும், அக்குழுவிற்குரிய தொடர்ந்தெழுதும் குறிப்பில் (Running Score) (1) என்ற முறையில் குறித்து வைப்பர்.

(ஈ) லோனாவுக்காகக் குறிக்கப்படும் வெற்றி எண்களை (-) எனச் சரிசமமாகக் காட்டிக் குறித்து வைப்பார். -

(உ) ஓய்வு நேரம் கேட்ட குழுவுக்குள்ள குறிப்பேட்டின் பகுதியில் T என்று குறிக்க வேண்டும் (T).

(ஊ) குறிப்பேட்டில் கீழ்க்கண்டவற்றின் கால நேரத்தைக் குறித்துக் கணக்கிட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு பருவத்திலும் (Half) ஓய்வு நேரங்களிலும், முதல் பருவ நேரத்தில் முதன் முதலில் வெற்றி எண்ணை எடுத்த குழுவின் பெயரையும் குறிக்க வேண்டும்.

நடுவர் அல்லது துணை நடுவர்களால் தரப்படுகின்ற தனியான வெற்றி எண்களை (Extra point) வட்டமிட்டுக் குறித்து வைக்க வேண்டும்.(0) 3.கோடுகாப்பாளர்களின் கடமைகள்

வெளியேற்றப்பட்ட ஆட்டக்காரர்களின் வரிசையைக் குறித்துக் கொண்டு, அந்த ஒழுங்கு முறைப்படிகுறிப்பிட்டஇடத்தில் அவர்கள் அமர்ந்திருக்கின்றனரா என்பதைக் கவனிக்க வேண்டும். கடைக்கோட்டுக்கு வெளியே குறிக்கப்பட்டுள்ள அவர்களுக்கான கட்டத்தில் (Block) வெளியேற்றப்பட்டவர்கள் வந்து அமரவேண்டும். வெளியேற்றப்பட்டவர்கள் மீண்டும் உள்ளே நுழைய வாய்ப்புப் பெற்றுப் போவதையும் (Revived) குறித்துக் கொள்ள வேண்டும். நடுவர்களின் கடமைகள் இனிது நிறைவேற உதவுவது இவர்களின் பணியாகும்.

குறிப்பு: 2 மீட்டர் 8 மீட்டர் அகல நீளமுள்ள, வெளியேற்றப் பட்டவரின் அமரும் கட்டம் (Waiting block) கடைக்கோட்டின் பின்புறத்தில், 2 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. -

குறிப்பாளர் மொத்த வெற்றி எண்களை இடைவேளை நேரத்தில் அறிவிப்பதுடன், கடைசி 5 நிமிடங்களில் ஒவ்வொரு நிமிடம் கடந்ததையும் தெளிவாகக் கூற வேண்டும்.

ஆட்டத் தொடக்கத்திற்கு முன்னர், குறிப்பாளர் கடிகாரத்துடன், நடுவர் தன் மணிப்பொறியை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வார். ஆனாலும், நடுவரின் மணிப்பொறி காட்டும் நேரமே சரியான ஆட்ட நேரம் ஆகும். -