பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 237

4. ஒட்டக்காரர் ஒருவரைத் தொட்டு வெளியேற்றினால், விரட்டும் குழுவிற்கு 1.வெற்றி எண் கிடைக்கும். குறிப்பிட்ட நேரத்திற்கு முன் எல்லா ஒட்டக்காரர்களையும் தொட்டு வெளியேற்றி விட்டால், முன்வந்த வரிசைப்படியே ஒட்டக்காரர்கள் மறுபடியும் எல்லைக்குள் வந்து ஆட வேண்டும். இவ்வாறு ஆடும் வாய்ப்பு முடியும் வரை ஆட்டம் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும். ஆடும் வாய்ப்பின் இடையில், ஒட்டக்காரர்களின் வரிசைமுறையை (Order) மாற்றவே கூடாது. -

5. முடிவாட்ட முறையில் (Knock out-system) ஆட்ட நேர இறுதியில் அதிகமான வெற்றி எண்களைப் பெற்றிருக்கின்ற குழுவே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். . . . *

இரண்டு குழுக்களும் சமமான வெற்றி எண்களைப் பெற்றிருந்தால் (Equa)மேலும் ஒருதடவை, முறை ஆட்டம் (inning) ஆடுகின்ற வாய்ப்புப்பெற்று ஆடவேண்டும். (அதாவது ஒவ்வொரு குழுவும் ஒருமுறை ஓடவும், ஒருமுறை விரட்டவும்பெறும் வாய்ப்பு), மீண்டும் வெற்றி எண்கள் சமமாக இருந்தால், மேலும் ஒருமுறை ஆட்டம் (Additional Inning) கீழ்கண்ட முறையில் ஆடவேண்டும்.

ஒரு குழு விரட்ட, மறு குழு ஓடும், விரட்டுகிற குழு ஒருவரைத் தொட்டவுடன், ஆட்டம் நிறுத்தப்படும்; தொட்டநேரமும் குறித்துக் கொள்ளப்படும். ஓடிய குழு விரட்டத் தொடங்கும். குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒருவரைத் தொட்டுவிட்டால், விரட்டிய குழு வெற்றி பெறும். இல்லையேல் எதிர்க்குழு வெற்றி பெறும். இதை (Minimum chase) என்பார்கள். குறிப்பிட்ட தொட்ட நேரத்திற்கு மேலாக 50 நொடிகள் கடந்த பிறகு, நடுவர் ஆட்டத்தை நிறுத்தி, வெற்றி பெற்ற குழுவை அறிவிப்பார். இந்த முறையே, வெற்றி தோல்வி தெரியும் வரை தொடரும்.

“தொடராட்ட முறை'யில் (Leaguesystem) வெற்றிபெற்ற குழு 2 எண்களையும், தோல்வியுற்ற குழு சுழியையும் (Zero) பெறுகிறது. இரு குழுக்களும் வெற்றி தோல்வியின்றி சமமாக இருந்தால், ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு வெற்றி எண்ணைப் பெற்றுக் கொள்ளும். ... “

தொடராட்ட முறையில், குழுக்கள் சமமான வெற்றி எண்கள் எடுத்திருந்தால் சீட்டெடுப்பு (Drawingalot) மூலம் குழுக்கள் பிரிக்கப் படும். அதற்கான போட்டி ஆட்டத்தையோ அல்லது ஆட்டங் களையோ மீண்டும் நடத்தி முடிக்க, முடிவாட்ட முறையைப் பின்பற்றியே தீர்மானிக்க வேண்டும்.