பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 விளையாட்டுக்களின் விதிகள் *Fo

6. எந்தக் காரணத்தினாலாவது ஆட்டம் முடிவு பெறாது நின்றுவிட்டால், அந்த ஆட்டம் அதே ஆட்டக்காரர்களோடு, அதே ஆட்ட அதிகாரிகளோடு ஒவ்வொரு குழுவுக்கும் முடிவுபெற்றிருந்த வாய்ப்பு முறைகளோடு மற்றொரு நேரத்தில் தொடர்ந்தாடப்பட வேண்டும். முடிவு பெறாமல் இடையில் நின்று போன ஆட்டம் அதே பொழுதில் ஆடப்படாமல் போனால், ஆட்ட ஆரம்பத்திலிருந்தே மீண்டும் ஆடப்பட வேண்டும். ஆட்டக்காரர்களும் அதிகாரிகளும் முன்பு இருந்தவர்களே இருக்க வேண்டிய அவசியமில்லை.

7. முதல் முறை ஆட்டத்தில் ஒரு குழு அடுத்த குழுவைவிட9 வெற்றி எண்கள் அல்லது அதற்கு மேலும் அதிகமாக எடுத்திருந்தால், அந்தக் குழுவுக்கு அடுத்தக் குழுவினரை விரட்டுகின்ற வாய்ப்பைப் பெற்று ஆடுமாறு கேட்க உரிமையுண்டு. அவர்கள் அவ்வாறு கேட்கும்பொழுது, தங்களுக்குரிய விரட்டும் வாய்ப்பை வேண்டாம் என்று கூறாமல் இருக்க வேண்டும். ஏனெனில், ஒருவேளை, மற்ற குழுவினர் அவர்களைவிட அதிகமான வெற்றி எண்களை எடுத்தாலும் எடுக்கலாம். அப்பொழுது அந்த விரட்டும் வாய்ப்

அவர்களுக்கும் தேவைப்படும் அல்லவா! -

8. நடுவரின் முடிவுப்படி, காயம்பட்ட ஆட்டக்காரருக்குப் பதிலாக, மாற்றாளை சேர்க்கலாம். -

9. பயிற்சியாளரின் ஏற்று, மாற்றாட்டக்காரரை ஆட நடுவர் அனுமதிப்பார். மாற்றாட்டக்காரரை மாற்றிக் கொள்கிற நேரம்.

(அ) விரட்டுகிற வாய்ப்புள்ள குழுவானது, ஆட்ட நேரத்தின் போது, எந்த சமயத்திலும் மாற்றிக் கொள்ளலாம்.

(ஆ) ஒட்டக்காரர்களின் குழு, தங்களது ஓடும் வாய்ப்பு ஆரம்பமாவதற்கு முன்பாகவே, மாற்றிக் கொள்ள வேண்டும். - - (இ) விரட்டும் குழுவில் தற்காலிகமாக ஒருவரை மாற்றிக் கொள்ள வேண்டுமானால், அது நடுவரின் முடிவின்படிதான் நடைபெற வேண்டும். - - - (ஈ) மாற்றப்பட்ட ஆட்டக்காரர். அதே போட்டி ஆட்டத்தில், மீண்டும் ஆடிட அனுமதி கிடையாது. இவ்விதியின்படி நடுவர் இதை தீர்மானிக்கிறார். -

10. நடுவர் போட்டியின் முடிவை அறிவிக்கும் வரையில், போட்டியிட்ட இரண்டு குழுக்களும், ஆடுகள எல்லையை விட்டுச்

செல்லக் கூடாது.