பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 விளையாட்டுக்களின் விதிகள்

தண்டனை: இந்த அயலிட விதியை மீறினால், தவறு செய்த ஆட்டக்காரரின் எதிர்க்குழுவினர், மறைமுகத்தனி உதை (Indirectfreekick) வாய்ப்புப் பெற்று, தவறு நடந்த இடத்தில் பந்தை வைத்து,

உதைக்க வேண்டும்.

ஒரு ஆட்டக்காரர் விளையாடும் நேரத்தில் அயல் இடத்தில் நின்று கொண்டிருந்தாலும், ஆட்டத்தில் கலந்து கொள்ளாமலும், எதிராளிக்கு இடையூறு செய்யாமலும், அல்லது அயலிடத்தில் நின்று அதனால் ஏதாவது ஒரு பயனும் அடையாமல் இருக்கிறார் என்று நடுவர் கருதினாலும், அவர் அயலிடத்தில் உள்ளவராகக் கருதப்பட மாட்டார்.

4. முக்கிய ஆட்டக் குறிப்புக்கள் 1. 56 flussog (Free kick)

தனியுதை இரண்டு வகையாகப் பிரிக்கப்படும்.

(அ) நேர்முகத் தனியுதை (Direct) இதனால் குற்றம் செய்த குழுவுக்கு எதிராக, பந்தை நேரே இலக்கினுள் செலுத்தி வெற்றி எண் பெறலாம்.

(ஆ) மறைமுகத் தனியுதை (Indirect) இதனால் பந்தை நேரே இலக்கினுள் செலுத்தி வெற்றி எண் பெற முடியாது. ஆனால், பந்து இலக்கினுள் நுழைவதற்கு முன்னர், வேறொரு ஆட்டக்காரர் அப்பந்தைத் தொட்டோ அல்லது விளையாடியோ இருக்கவேண்டும்.

தனியுதை எடுக்கும் முறை: நேர்முக அல்லது மறைமுகத் தனியுதை எடுக்கப்படும் பொழுது, எதிர்க்குழு ஆட்டக்காரர்கள் எல்லோரும், பந்தில் இருந்து 9.15 மீட்டர் அப்பால் நிற்க வேண்டும். ஆனால், அவர்கள் இலக்குக் கம்பங்களுக்கு இடையேயுள்ள தங்களது கடைக்கோட்டின் மேல் நின்று கொண்டிருந்தால், 9.15 மீட்டர் தூர விதியைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. எதிர்க்குழுவில் உள்ள ஒருவர், தனி உதை எடுக்கு முன்9.15 மீட்டர் உள்ளாக அருகில் வந்தால், தனி உதை எடுப்பதைத் தாமதமாக்கி, வந்த ஆட்டக்காரரை அப்பால் போகச் செய்து ஆட்டத்தை நடுவர் தொடங்கி வைப்பார். எதிரணியினர் 9.15 மீட்டருக்குள் இடைவெளிவிட்டு நிற்கத் தவறினால் அல்லது, உதைக்கும்போது இடையூறு செய்தால் மீண்டும் தனியுதை அந்த அணிக்கே வழங்கப்படும்.

தனியுதையை தாமதப்படுத்துவதற்காக, போகச்சொன்னபிறகும் போகாமல் இருப்பவருக்கு பண்பற்ற நடத்தைக்காக, கடுமையான தண்டனை தரலாம்.