பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 25

உதைக்கப்படும் பந்து தனது சுற்றளவு முழுவதையும் உருண்டு கடந்தால் ஒழிய அது ஆட்டத்தில் ஆடப்படும் தகுதியைப் பெறாது. இன்னும், தனியுதை எடுக்கப்படுவதற்கு அதனை, பந்து அசையாத நிலைப்பந்தாக இருக்க வேண்டும். மற்ற ஆட்டக்காரர் பந்தை தொட்டோ அல்லது விளையாடு முன்னர், உதைத்த ஆட்டக்காரரே இரண்டாம் முறையாக மீண்டும் தொட்டு விளையாடக் கூடாது.

ஒறுநிலைப் பரப்பில் இருந்து தனியுதை எடுக்கும் வாய்ப்புப் பெற்றத் தடுக்கும் குழுவினர் அந்தப் பரப்பிற்கு வெளியே பந்து செல்லுமாறு உதைத்தாட வேண்டும். அவ்வாறின்றி, இலக்குக் காவலர் அப்பந்தைப் பெறுமாறு உதைத்து, அவர் பந்தை எத்தி ஆடுகளத்தினுள் இடச்செய்வது தவறான முறையாகும். இம்முறைப் பின்பற்றப்பட்டால், தனியுதை மீண்டும் எடுக்கப்படவேண்டும்.

தண்டனை: மற்ற ஆட்டக்காரர் தொட்டோ அல்லது விளையாடவோ செய்யாத பந்தை, உதைத்தவரே மீண்டும் ஆடினால், தவறு நடந்த இடத்தில் வைத்து மறைமுகத் தனியுதை எடுக்கும் வாய்ப்பை எதிர்க் குழுவினர் பெறுவர். 2. osplone) 2-605 (Penalty kick)

ஒறுநிலைப் புள்ளியில் இருந்தே (Penalty - kick) ஒறுநிலை உதை எடுக்கப்படும். ஒறுநிலை உதை எடுக்கப்படும் பொழுது, பந்தை உதைக்கும் ஆட்டக்காரர், அதைத் தடுக்கின்ற இலக்குக் காவலர், இவர்கள் இருவரையுந் தவிர, மற்ற ஆட்டக்காரர்கள் எல்லோரும் ஒறுநிலைப் பரப்பிற்கு வெளியே, குறைந்தது ஒறுநிலைப் புள்ளியில் இருந்து 9.15 மீட்டர் அப்பால் (ஆடு களத்தினுள்) நிற்க வேண்டும்.

பந்து எத்தப்படும்வரை, இலக்குக் கம்பங்களுக்கிடையே கடைக்கோட்டின் மேல் நின்று கொண்டிருக்கும் இலக்குக் காவலன், தன்னுடைய கால்களை பக்கவாட்டில் அசைக்கலாம். உதைக்கும் ஆட்டக்காரர் முன்புறம் (Forward) நோக்கியே பந்தை உதைக்க வேண்டும். மற்ற ஆட்டக்காரர் தொட்டோ அல்லது விளையாடாத பந்தைத் தானே இரண்டாம் முறையாக ஆடக் கூடாது.

உதைக்கப்பட்டப்பந்து அதன் சுற்றளவு முழுவதையும் உருண்டு கடந்தால்தான், அது ஆட்டத்தில் உள்ளதாகக் கருதப்படும். இவ்வுதையில், நேராகவே பந்தை இலக்கினுள் உதைத்து வெற்றி எண் பெறலாம்.இடைவேளை அல்லது முழுநேரமும் முடிவுபெறும் நேரத்தில். ஒறுநிலை உதை எடுக்கப்படும் பொழுது, இலக்குக்