பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 விளையாட்டுக்களின் விதிகள் *ES

காவலனைப் பந்து தொட்டு இரு கம்பங்களுக்கு இடையே கடந்து சென்றுவிட்டதென்றால், அது வெற்றி எண் என்றே கருதப்படும்.

தேவையானால், ஒறுநிலை உதையை எடுப்பதற்காக ஆட்ட நேரத்துடன் இன்னும் சிறிது நேரம் சேர்த்துக் கொள்ளலாம்.

தண்டனை: (அ) தடுக்கும் குழுவினர் இந்த விதியை மீறி நடந்தால், வெற்றி எண் கிடைக்காவிட்டாலும் மீண்டும் ஒருமுறை ஒறுநிலை உதை எடுக்கும் வாய்ப்பு எதிராளிக்குக் கிடைக்கும்.

(ஆ) தாக்கும் குழுவினர் (உதைப்பவரைத் தவிர) இந்த விதியை மீறி நடந்தால், வெற்றி எண் கிடைத்திருந்தாலும், ஒறுநிலை உதை மீண்டும் எடுக்கப்படும்.

(இ) உதைக்கும் ஆட்டக்காரர் இந்த விதியை மீறி நடந்தால், தவறு நடந்த இடத்தில் பந்தை வைத்து மறைமுகத் தனியுதை எடுக்கும் வாய்ப்பைத் தடுக்கும் குழுவினர் பெறுவர். 3. * SirQorolgo (Throw-in)

தரைமேல் உருண்டோ அல்லது மேலெழுந்தவாறோ (Intheair) பக்கக் கோட்டைக் கடந்து பந்து முழுவதும் சென்றால், கடைசியாகப் பந்தைத் தொட்டாடிய குழுவினரின் எதிராளிகள் பந்தை உள்ளெறியும் வாய்ப்பைப் பெறுவர். பக்கக் கோட்டைக் கடந்து பந்து சென்ற

இடத்தில் இருந்துதான் உள்ளெறிய வேண்டும்.

பந்தை உள்ளெறியும் சமயத்தில் ஆடுகளத்தை நோக்கியிருந்த படியே (ஏதாவது ஒவ்வொரு காலின் பகுதி பக்கக் கோட்டைத் தொட்டுக் கொண்டிருக்கலாம். அல்லது கோட்டுக்கு வெளியேயும் இருக்கலாம்.) எறிபவர் உள்ளெறிய வேண்டும். பந்தை எறியும் பொழுது, இரு கைகளையும் உபயோகித்துத் தலைக்கு மேலாக வைத்தே எறிய வேண்டும். பந்தை உள்ளெறிந்த ஆட்டக்காரரே பிறர் பந்தைத் தொட்டு விளையாடும் முன் இரண்டாம் முறையாகத் தானே ஆடக்கூடாது.

உள்ளெறிதலால், நேராகப் பந்தை இலக்கினுள் எறிந்து வெற்றி எண் பெற முடியாது.

தண்டனை: விதிகளுக்குப் புறம்பாக உள்ளெறிதலைச் செய்தால், எறிந்தவருக்கு எதிராக உள்ள குழுவில் உள்ள மற்ற ஒருவருக்கு உள்ளெறியும் வாய்ப்பு வழங்கப்படும்.

மற்ற ஆட்டக்காரர்கள் பந்தை விளையாடும் முன்னர் உள்ளெறிந்தவரே, இரண்டாவது முறையாக ஆடினால், அந்தத்