பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 27

தவறு நடந்த இடத்தில் இருந்து முறைமுகத் தனி உதை எடுக்கும் வாய்ப்பை எதிர்க்குழுவினர் பெறுவர்.

4. (55uq605 (Goal-kick)

தாக்கும் குழுவினரால் கடைசியாக விளையாடப்பட்ட பந்து, இலக்குக் கம்பங்களுக்கு இடையில் போகாமல் உருண்டோ அல்லது மேலெழுந்தவாறோ கடைக்கோட்டிற்கு வெளியே கடந்து சென்றால், மறைமுகத் தனியுதையைத் தடுக்கும் குழுவினர் பெற்று, பந்து சென்ற பக்கமாக உள்ள இலக்குப் பரப்பில் (Goal area) பந்தை வைத்து உதைத்து, (Goal kick) ஆட்டத்தைத் தொடங்குவர்.

இலக்குப் பரப்பினுள் வைக்கப்பட்டுள்ள பந்து, ஒறுநிலைப் பரப்பிற்கு வெளியே செல்லுமாறு உதைக்கப்பட வேண்டும். அவ்வாறு ஒறுநிலைப் பரப்புக்கு வெளியே பந்து இல்லாவிட்டால், மறுமுறையும் குறியுதைக்கு வாய்ப்பு அளிக்கப்படும். மற்றவர் பந்தைத் தொட்டு விளையாடுவதற்கு முன், உதைத்தவரே

இரண்டாம் முறையும் விளையாடக் கூடாது.

குறியுதையில் பந்தை உதைத்து, இலக்குக் காவலனுக்குத் தள்ளிவிட்டு, அவன் அதைப் பிடித்து எத்தி ஆட்டத்தில் இடுவது கூடாது. குறியுதையால் நேராக பந்தை இலக்கினுள் உதைத்து வெற்றி எண் பெறவும் முடியாது. குறியுதை எடுக்கப்படும் பொழுது தாக்கும் குழு ஆட்டக்காரர்கள் எல்லோரும் பந்து உதைக்கப்படும் வரை, ஒறுநிலைப் பரப்பிற்கு வெளியே நின்று கொண்டிருக்க வேண்டும்.

தண்டனை: குறியுதை எடுத்த ஆட்டக்காரர், ஒறுநிலைப் பரப்பிற்கு வெளியே பந்தை மற்ற ஆட்டக்காரர்கள் உதைத்து விளையாடுவதற்கு முன்னே இரண்டாவது தடவையாகத் தானே ஆடும் தவறைச் செய்தால், தவறு நிகழ்ந்த இடத்தில் இருந்து மறைமுகத் தனியுதை எடுக்கும் வாய்ப்பை எதிர்க்குழுவினர் பெறுவர்.

5. Uponsorujo (Corner-kick)

தடுக்கும் குழுவினரால் கடைசியாக விளையாடப்பட்ட பந்து, இலக்குக் கம்பங்களுக்கு இடையில் போகாமல், தரையில் உருண்டோ அல்லது மேலெழுந்தவாறோ கடைக்கோட்டிற்கு வெளியே கடந்து சென்றால், மீண்டும் ஆட்டத்தைத் தொடங்கி வைக்க முனையுதை (corner-kick) பயன்படுகிறது.

பந்து கடந்து சென்ற பக்கத்துக்கு அருகில் உள்ள முனைக் கொடிக் கம்பம் நாட்டப் பெற்றிருக்கும் கால்பந்தின் பரப்பில், பந்தை