பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா - 283

(4) பந்தடிக்கும் ஆட்டக்காரராக மாற்றாட்டக்காரர் அனுமதிக்கப்பட்டாலும், அவர் ஆடும் வரிசைப்படிதான் (Batting Order) வந்து ஆடவேண்டும். - . . . . .

(5) மாற்றாட்டக்காரர் மாறிய குறிப்பினை நடுவர் அறிவித்தாலும் அறிவிக்காவிட்டாலும், அவர் ஆடுகின்ற ஆட்டம் விதிப்படி முறையாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்றே அர்த்தம் ஆகும்.

(6) பந்தெறிபவர் என்று பதிவுசெய்யப்பட்டஆட்டக்காரருக்குப் பதிலாக ஒருவர் மாற்றப்படவேண்டுமென்றால், அதை உடனே மற்ற ஆட்டக்காரருக்குப் பதிலாக ஆளை மாற்றுவதுபோல், எளிதாகச் செய்துவிட முடியாது.

குறிப்பிட்ட பந்தெறிபவர் எந்த பந்தடிக்கும் ஆட்டக்காரரை நோக்கி எறிந்து கொண்டிருக்கிறாரோ, அவரின் அந்த ஆடும் வாய்ப்பு முடியும் வரை முழுதும் எறிந்த பிறகுதான் மாற்றாட்டக்காரரை மாற்ற வேண்டும். நினைத்தவுடன் பந்தெறிபவரை மாற்றிவிட முடியாது.

(7) ஒரு தடவை ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்ட ஓர் ஆட்டக்காரர், மீண்டும் வந்து ஆட்டத்தில் கலந்து கொள்ள முடியாது. ஆனால், பார்வையாளராக வந்து பங்கு பெறலாம்.

(8) எந்த ஆட்டக்காரரும் பந்தடிப்பவர் முன்னே வந்து அவரது பார்வையை அல்லது ஆட்டத்தை மறைப்பது அல்லது தொந்தரவு தருவது போல வேண்டுமென்றே நிற்கக்கூடாது.

5. விளையாடும் முறை (The Game) 1. போட்டி நடைபெற இருக்கின்ற ஆடுகளத்தின் தகுதியை, அது தரமாக இருக்கின்றதா இல்லையா என்பதை, தள நடுவரே தீர்மானித்து முடிவெடுப்பார். -

ஆடுங்கள் என்று ஆட்டத்தைத் தொடங்கி வைத்த பிறகே, ஆடுகளத்தின் தரைத் தகுதியைப் பற்றி முடிவெடுக்கின்ற உரிமை நடுவருக்கும் உண்டு. * -

2. ஆட்டத்தைத் தொடங்குவதற்காக எந்தக் குழு முதலில் அடித்தாடுவது அல்லது தடுத்தாடுவது என்பதைத் தேர்ந்தெடுக்க நாணயம் சுண்டியெறிதலின் (Toss) மூலம் தீர்மானிக்கப்படும்.

3. ஒருபோட்டி ஆட்டத்தில்7 முறை ஆட்டங்கள் (Seven innings) இரு குழுக்களும் ஆடவேண்டும். -

ஒரு முறை ஆட்டம் என்பது, ஒரு தடவை அடித்தாடுவது (Batting), ஒரு முறை தடுத்தாடுவது (Fielding) ஆகும்.