பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 287

கூடாது. அதுமட்டுமன்றி கோடுகளுக்கு வெளியேயுள்ள தரைப் பகுதியையும் தொடக்கூடாது.

3. பந்தெறிபவர் (Pitcher) பந்தெறியத் தயாராக நின்று கொண்டிருக்கும் பொழுது, பந்தடித்தாடுபவர் தான் நின்று கொண்டிருக்கும் இடத்திலிருந்து (Catcher) முன்புறமுள்ள மற்றொரு அடித்தாடும் கட்டத்திற்குள் சென்றுவிடக் கூடாது.

தண்டனை: இது தவறாகும். விதியை மீறி நடந்து கொண்ட பந்தடிக்கும் ஆட்டக்காரர் ஆட்டமிழந்தார் (Out) என்று அறிவிக்கப்பட, பந்து நிலைப்பந்தாகிறது (Dead Ball). அதே சமயத்தில், தள ஒட்டக்காரர்கள் மேலும் ஒரு தளம் போவதற்கும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

4. அடுத்த பந்தடிக்காரர் வரலாம் என்ற நடுவர் அறிவித்த 20 நொடிகளுக்குள், அடுத்த பந்தடிக்காரர் உடனே வந்து தனக்குரிய ஆடும் இடத்தில் முறைப்படி நின்று கொள்ள வேண்டும்.

தண்டனை: 20 நொடிகளுக்குள் தனக்குரிய இடத்திற்கு வராத அந்த பந்தடி ஆட்டக்காரர், ஆட்டமிழந்தார் என்று நடுவரால் அறிவிக்கப்படுவார். பந்து ஆட்டத்தில் உள்ளதாகக் கருதப்படாமல், நிலைப் பந்தாகிறது.

8. ஆடவருகின்ற வரிசையும் விதிமுறையும்

5. குறிப்பேட்டில் கொடுக்கப்பட்டிருக்கின்ற ஆட்டக்காரர்களின் பெயர் வரிசைப்படியே, ஒவ்வொருவரும் பந்தடித்தாடிட வர வேண்டும்.

இவ்வாறு பந்தடிக்க வருகின்ற வரிசையின்படியே, ஒவ்வொரு குழுவின் மேலாளர் அல்லது குழுத் தலைவன் தள நடுவரிடம் பட்டியலைத் தரவேண்டும். அவர் அதனைக் கொண்டு சென்று குறிப்பாளரிடம் கொடுப்பார்.

தண்டனை: அவ்வாறு வரிசைமுறையாகப் பெயர்களைத் தரத் தவறினால், அக்குழுவினை ஆட்டமிழந்ததாக நடுவர் அறிவித்து விடுவார். -

6. பந்தாட வருகின்ற வரிசை முறையை, நடுவரிடம் கொடுத்திருப்பது போலவே, ஆட்டம் முழுவதும் தொடர்ந்து ஆட வந்து கொண்டேயிருக்க வேண்டும். யாராவது ஆட்டக்காரர்கள் ஒருவருக்குப் பதிலாக மாற்றாட்டக்காரர் ஆட வந்தால், எந்த