பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 விளையாட்டுக்களின் விதிகள் *Eo

7. ஒவ்வொரு முறை ஆட்டத் தொடக்கத்திலும்

1. ஒவ்வொரு முறை ஆட்டம் (Inning) தொடங்குகின்றபோதும், அல்லது ஒரு பந்தெறியாளரை (Pitcher) மாற்றி, மற்றொருவர் பந்தெறியாளர் ஆடுகின்ற போதும், தன்னுடைய குழு ஆட்டக்காரர்களுக்கிடையே அல்லது பந்தைப் பிடிப்பவருக்கிடையே 5 முறை பந்தை எறிந்து வழங்கி ஆடுகின்ற பயிற்சி ஆட்டத்தை 1 நிமிடத்திற்குள்ளாக ஆடிப்பார்த்துக் கொள்ள வேண்டும்.

2. இவ்வாறு முன்மாதிரியாக பந்தெறிந்து ஆடிப் பார்க்கின்ற பொழுது, ஆட்டம் நிறுத்தப்பட்டிருக்கிறது.5 முறை பந்தெறிந்து ஆட வேண்டும் என்ற அளவினை மீறி, பந்தெறிபவர் எறிந்தால், அவர் அவ்வாறு எறிந்ததற்காக பந்து (Ball) என்று கணக்கிட்டு நடுவர் எண்ணத் தொடங்கிவிடுவார். -

ஆகவே 5 முறைக்குமேல் எறிந்து பார்க்கக் கூடாது.

3. பந்தை எறிந்திட பந்தெறியாளர் தன் கையை பின்புறம் (Windup) கொண்டு செல்லும்பொழுது, பந்து தவறி கீழே விழுந்துவிட்டால், பந்து ஆட்டத்தில் உள்ளதாகவே கருதப்படும். அப்பொழுது தள ஓட்டக்காரர்கள், தாங்கள் தொடப்பட்டால் ஆட்டமிழக்கலாம் என்ற நிலையில், தங்களை சோதனைக்குள்ளாக்கிக் கொண்டு, தளம் மாறி ஓடலாம். முன்றேலாம்.

4. பந்து ஆட்டத்தில் உள்ளது என்ற நிலையில், பந்து பந்தெறியாளருடைய கைக்கு வந்து, அவரது காலானது பந்தெறியும் கட்டத்தைத் தொட்டுக் கொண்டிருந்தால், அவர் அப்பொழுது தளம் நோக்கிப் பந்தை எறிய முடியாது.

தண்டனை கட்டத்தில் இருந்தவாறு அவர் தளம் நோக்கிப் பந்தை எறிந்தால், அது தவறான பந்தெறி (legal Pitch) என்று தீர்மானிக்கப்படும். பந்து நிலைப்பந்தாகிறது.

பந்தெறியும் கட்டத்திலிருந்து எறிந்த பந்தின் காரணமாக முறையீடு ஆட்டம் (Appeal Play) எழுந்தால் அந்த முறையீடு நிராகரிக்கப்படும். -

5. முறை ஆட்டம் ஒன்று நடந்து கொண்டிருக்கும் பொழுது, பந்தெறிபவருடன் அவர் குழுவின் மேலாளர்அல்லது வேறு பிரதிநிதி ஒருவர், ஒருமுறை தான் வந்து கலந்து பேசி கருத்துப் பரிமாற்றம் (Conference) செய்து கொள்ளலாம். இரண்டாம் முறையாகக் கலந்து பேசினால், அந்தப் பந்தெறியாளர் பந்தெறியும் பணியிலிருந்து நீக்கப்படுவதுடன், அந்த ஆட்டம் முடியும் வரை பந்தெறியாளராக அவர் பணியாற்ற முடியாதவாறு நீக்கப்பட்டுவிடுவார்.