பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 விளையாட்டுக்களின் விதிகள் *Ec

திரும்பி ஓட முயல்வது என்பது தடுத்தாடுபவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவதுபோல் அல்லது ஆட்டத்தையே பரிகாசம் பண்ணுவது போல் ஆகும் என்பதால், அவ்வாறு ஓடக் கூடாது.

தண்டனை: பந்து நிலைப்பந்தாகிறது. அவ்வாறு ஓடிய தள ஒட்டக்காரர் ஆட்டமிழக்கிறார் (Out).

6. இரண்டு தள ஓட்டக்காரர்கள் ஒரே சமயத்தில் ஒரு தளத்தில் இடம் பிடித்துக் கொண்டிருக்கக் கூடாது.

தண்டனை: விதி முறைக்கேற்ப, முதலில் ஒரு தளத்தைப் பிடித்துக் கொண்டிருப்பவரே தளத்திற்கு உரியவர் ஆகிறார். அடுத்த தள ஓட்டக்காரர், தடுத்தாடுபவரால் பந்தால் தொடப்பட்டால், ஆட்டமிழந்துவிடுவார் (out).

7. முதலில் அதாவது முன்னால் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ஒட்டக்காரர், தளத்தினை ஒழுங்காக மிதிக்காமல் ஓடி அதனால் ஆட்டமிழந்து போனால், அவரைத் தொடர்ந்து ஓடிவருகின்ற அடுத்த ஒட்டக்காரரை அது பாதிக்காது. அவர் சரியான முறையில் தளத்தினைத் தொட்டால், அந்தத் தளத்திற்கு அவர் உரியவர் ஆகிவிடுகிறார்.

இவ்வாறு சரியான முறையில் தளத்தினைத் தொடாதவர் ஆட்டமிழப்பதினால், அவர் மூன்றாவது ஆட்டமிழக்கும் ஆளாக (Third out) இருந்தால், அவரைத் தொடர்ந்து ஓடிவரும் ஒட்டக்காரர் ஓட்டம் (Run) எடுக்க முடியாது.

8. தளத்தை மிதிக்காமல் ஓடிச்சென்ற ஒரு ஒட்டக்காரர், அல்லது தவறான முறையுடன் தளத்தை விட்டு நீங்கிச் சென்ற ஒரு ஒட்டக்காரர், தன் தளத்திற்கு அடுத்த ஒட்டக்காரர் வந்து சேர்ந்துவிட்டால், அந்தத் தளத்திற்கு மீண்டும் இவர் திரும்பிப் போய்ச் சேர முடியாது.

பந்து நிலைப் பந்தாகிவிடுகிற பொழுது, தான் தொடத்தவறிய தளத்தினை எந்த ஒட்டக்காரரும் திரும்பி வந்து தொட முடியாது. அல்லது, தன் தளத்தை விட்டு நீங்கி, தான் தொடத் தவறிய தளத்திற்கு அடுத்த தளம் நோக்கி முன்னேறிச் சென்றவர் அல்லது தன் தளம் விட்டு நீங்கிச் சென்றவர், தான் தொடாமல் விட்ட தளத்தைத் தொட முடியாது.

9. தவறான முறையிலே ஒருமுறை தன்னுடைய தளத்தினை விட்டுவிட்டு நீங்கிச் சென்ற அல்லது தொடாமல் தவறவிட்ட தளத்தினை ஒரு ஒட்டக்காரர் திரும்பி வந்து தொட முடியாது.