பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 303

2. பந்தடிக்கும் ஆட்டக்காரர் தள ஓட்டக்காரர் ஆவது

எப்பொழுது? - - . -

1. விதிமுறைகளுக்கேற்ப எறியப்பட்டு வரும் சரியான பந்தை சரியாக அடித்துவிட்டால்;

2. ஏற்கெனவே இரண்டு ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்திருக்காத நிலையில், முதல் தளத்தில் யாரும் இல்லாமல் காலியாக இருக்கும் பொழுது, அல்லது இரண்டு ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்திருக்கும் நிலையில், பந்தடிக்கும் ஆட்டக்காரர் மூன்றாவது அடி (Third Strike) என்று நடுவர் கூறிவிடுகிற பொழுது, அந்தப் பந்தானது தரையைத் தொடுவதற்கு முன்பிடிக்கத் தவறிவிட்டால். -

3. எல்லைக்கு வெளிப்புறப் பகுதியில் நின்று கொண்டிருக்கும் நடுவரின் உடல் அல்லது உடைமேல் பந்து பட்டுவிட்டால்.

குறிப்பு: பந்து ஆட்டத்தில் உள்ளதாகக் கருதப்படும் பந்தடி ஆட்டக்காரர் தளம் நோக்கி ஓடலாம். ஆனால் தொடப்பட்டால் ஆட்டமிழக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் அவர் தளம் நோக்கி ஓடலாம்.

4. நான்கு பந்துகள் (Four Balls) என்று நடுவர் அறிவித்தவுடன்,

குறிப்பு: பந்து தடுக்கப்பட்டிருக்காவிடில், பந்து ஆட்டத்தில் உள்ளதாகவே கருதப்படும். தொடப்பட்டாலும் ஆட்டமிழக்கமாட்டார் என்பதின்பேரில், பந்தடிக்கும் ஆட்டக்காரர் ஒரு தளம் நோக்கிப்போக அனுமதிக்கப்படுவார். ஒரு தளம் முன்னேறிச் செல்ல அவருக்கு உரிமையுண்டு.

5. பந்தெறியாளரிடமிருந்து வருகிற பந்தை அடிக்க முனையும்போது, பந்தடிக்கும் ஒரு ஆட்டக்காரருக்கு இடையூறு செய்ய அல்லது தடுத்திட, பந்தைப் பிடிப்பவர் முயன்றால்,

குறிப்பு: பந்து நிலைப் பந்தாகிவிடும். பந்து ஆட்டத்தில் இல்லை. அதாவது ஆடப்படவில்லை (Notin play) என்பதாகிவிடும். பந்தடிக்கும் ஆட்டக்காரர் ஒருதளம் நோக்கி முன்னேறிப்போக அனுமதிக்கப்படுவார். முதல் தளம் நோக்கி அவர் பத்திரமாகப் போய்ச் சேர்ந்தவுடன், மற்ற தள ஓட்டக்காரர்கள் அனைவரும் குறைந்த அளவு ஒரு தளம் நோக்கி முன்னேறிச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

6. ஆடுகள உட்புறத்தில் நின்று கொண்டிருக்கும் நடுவர் அல்லது தள ஓட்டக்காரர் உடலின் மீது அல்லது உடையின் மீது பந்து பட்டால்,