பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 - விளையாட்டுக்களின் விதிகள் *ES

கால்களை வளைக்காமல் மேலும் கீழும் இயக்கவும். கைகளை மாற்றி மாற்றிப்போடும் அதே சமயத்தில் கால்களையும் மாற்றி மாற்றி வேகமாக இயக்க வேண்டும்.

உங்கள் கைகளை காதுக்கு அருகாமையிலும் வைத்து கைகளை இயக்கியும், முகத்தை பக்கவாட்டில் திருப்பியும் கால்களை வளைக்காமலும் மேலும் கீழும் இயக்கியும் உங்கள் உடல் அசைவுகள் இருப்பதால், நீங்கள் நீந்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள். இப்போது நீங்கள் தடையில்லா நீச்சலை கற்றுக் கொண்டீர்கள்.

2. loserbg. Bggs (Back stroke)

நீங்கள் வானத்தைப் பார்ப்பது போன்று மல்லாந்து தண்ணில் படுத்துக் கொண்டு கால்களை நேராக நீட்டவும். தலையை சற்று உயர்த்திய நிலையில் அதாவது உங்கள் தாடைப் பகுதி நெஞ்சில் படும்படியாக வைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு காலை மேலே உயர்த்தி கீழே இறக்கவும். மறுகாலை கீழிருந்து மேலாக துக்கி இயக்கவும். கைகளை மாற்றி மாற்றி இயக்கி, கைகளைப் பின்புறம் கொண்டு சென்று தண்ணிரைத் தள்ளவும். கைகளை வளைக்காமல் கீழிலிருந்து மேலே கொண்டு வந்து மீண்டும் கீழே தோளுக்கு நேராக வரும்போது முழங்கையை மடக்கி தண்ணி ை

-- - - - - ---

- _ - - ------ ---- -  :::::

o - *** *

-

---