பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப்படி வந்தோர்க்கெல்லாம் வளங்களை வாரி வழங்குகிற விளையாட்டுக்கள் எல்லாம், நீராக நிறைந்த ஆறாக ஒடும் ஆற்றல் மிக்கவை. ஆற்றுக்குக் கரைபோல, ஆற்றலை ஒழுங்குபடுத்துகின்ற ஆற்றல் விதிகளுக்கு மட்டுமே உண்டு.

எல்லாதரமக்களும், விரும்புகிற இலக்கணங்களைக் கொண்ட விளையாட்டுக்களெல்லாம், நாடு, இனம், மொழி, நிறம் கடந்து உலகமெல்லாம் உலா வந்து கொண்டிருக்கின்றன. பிரிவுகளும் உறவுகளும் கொண்ட உலகையெல்லாம் ஒரு குடையின் கீழ் கோலோச்சி வருகிற விளையாட்டுக்களை எல்லாம் உலக மக்கள் எல்லோரும் ஒன்றுபோல் ஆடினால்தானே, உலகம் இணையும், உள்ளங்கள்.மகிழும். விளையாட்டுப்பண்பாடுகளும் மலரும்; வளரும்.

அதற்காக அமையப் பெற்ற அருமையான முயற்சிகள்தான், அகில உலக விளையாட்டுக்களின் விதிகளாக வடிவம் பெற்றிருக்கின்றன. அந்தந்த நாட்டு மொழிகளில், விதிகள் மொழியாக்கம் பெற்றிருந்த காலத்தில், தமிழர்களுக்கு இல்லை யென்ற குறையும் இருந்ததை மாற்றி, அன்னைத் தமிழில் அரிய களஞ்சியமாக, 1964-ஆம் ஆண்டே நான் முதலில் எழுதி வெளியிட்டேன். - -

இன்று ஏறத்தாழ 35 ஆண்டுகாலமாக, தமிழ்ச்சமுதாயத்தினாலே அருமையாகப் பின்பற்றப்பட்டு பெருமையுடன் உலவி வருகிறது. அவ்வப்போது ஏற்படுகிற விதிகள் மாற்றங்களுக்கு ஏற்ப, புதிய விதிகளை உள்ளடக்கிய புதிய நூலும் வெளியாகிக் கொண்டு வந்திருக்கிறது.

இப்போது, புதிய விதிகளுடன், திருத்திய தெளிந்த முறையில் எழுதப்பட்டு1999-ஆம்ஆண்டு ஜனவரியில் புதிய வெளியீடாக வெளி வந்திருக்கிறது. விளையாட்டுஅன்பர்கள், வீரர்கள், வீராங்கனைகள், விவேகிகள் அனைவரது கரங்களிலும் தவழுமாறு இன்று வழங்கியிருக்கிறோம். o

வளம் பெருக பயன்பெறுக என்று வாழ்த்துகிறோம்.

இந்நூலை அழகுற தயாரித்த ஆர்.ஆடம் சாக்ரட்டீஸ் மற்றும் அச்சகத்தாருக்கு என் நன்றி.

அன்பன் டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா

1999-ஆம் வெளியிட்ட பதிப்பில் ஆசிரியரின் அப்படியே அச்சிடப்பட்டுள்ளது.