பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 விளையாட்டுக்களின் விதிகள்

2. ஆட்டக்காரர்கள், மாற்றாட்டக்காரர்கள் குழு பயிற்சியாளர்கள் 1. (509&ssir (Teams)

5 ஆட்டக்காரர்களைக் கொண்டது ஒரு குழுவாகும். அவர்களிலேயே ஒருவர் குழுத்தலைவனாக இருப்பார். ஏதாவது ஒரு குழுவில் 5 பேர்கள் இல்லாமலிருந்து ஆடுவதற்குத் தயாராக இருந்தாலும், ஆட்டத்தைத் தொடங்க முடியாது. ஆட்டத்தைத் தொடங்குவதற்குரிய நேரத்தில் 15 நிமிடங்கள் கடந்தும் வரத் தவறிய ஒரு குழு, ஆடும் வாய்ப்பை இழக்கும். எதிர்க்குழு அந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

2. குழுத் தலைவன் (Captain)

குழுத் தலைவன், தன்னுடைய குழுவின் சார்பாளனாக (Representative) இருப்பதோடல்லாமல், தன் குழுவை வழி நடத்தவும்; கட்டிக் காத்துக் கொள்பவருமாகவும் இருக்கிறார். தேவையான பொழுது, முக்கியமான செய்திகளை அறிவதற்காகவும், அதற்குரிய விளக்கங்கள் பெற்றுத் தெளிவடைவதற்காகவும், பண்பு நெறி வழுவாமல் ஆட்ட அதிகாரியிடம், குழுத்தலைவன் பேசலாம். கீழே காணும் 3-ம் விதியைத் தவிர, எந்த ஆட்டக்காரரும், ஆட்ட அதிகாரிகளிடம் எதைப் பற்றியும் பேசவோ, எடுத்துச் சொல்லவோ கூடாது. -

தகுந்த காரணத்துடன் ஆடுகளத்தை விட்டு வெளியேறும் ஆட்டக்காரரையும், அவருக்கு மாற்றாளாக அவரிடத்திற்கு வருகிற மாற்றாட்டக்காரரைப் பற்றியும், ஆட்ட அதிகாரிகளிடம் குழுத் தலைவன் கட்டாயமாக அறிவிக்க வேண்டும்.

3. மாற்றாட்டக்காரர்கள் (Substitutes)

ஒவ்வொரு குழுவுக்கும் 5 மாற்றாட்டக்காரர்கள் உண்டு. ஏற்கெனவே குறிப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ள மாற்றாட்டக்காரர்கள் மட்டும் நேரங்கழித்து வந்தாலும், அவர்கள் ஆட்டத்தில் ஆடும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

(அ) நிலைப்பந்தாக பந்து மாறியதும் (Dead Ball) (ஆ) தவறுக்காகவும் (Foul) (இ) ஓய்வு நேரத்திற்காகவும் (Time out) (ஈ) காயம்பட்ட ஆட்டக்காரரைக் கவனிப்பதற்காகவும், ஆட்ட அதிகாரிகள் ஏற்று, ஒத்துக்கொள்கின்ற மற்ற பல்வேறு காரணங்