பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 விளையாட்டுக்களின் விதிகள்

அவ்வாறு செய்வதன் மூலம் ஆட்டத்தை அவர் தாமதம் செய்தால் அது தனிநிலைக் குற்றமாகும். 9. 39-Lib Qplosus);60 (End of the Game)

ஆட்ட நேரம் முடிந்ததென்று நேரக்காப்பாளரின் சைகை ஒலி வந்தவுடனேயே, ஆட்டம் முடிவு பெறுகிறது. பருவத்தின் முடிவு அல்லது கூடுதல் நேரம் முடிகிறதென்று நேரக்காப்பாளரின் சைகை வருவதற்கு சிறிதுநேரம் முன்னதாக, தவறு எதுவும் நிகழ்ந்திருந்தால், அதற்குத் தண்டனையாகத் தரப்படும் தனிஎறி அல்லது எறிகளை (Throws) எடுத்து முடிக்க நேரம் கொடுக்கப்பட வேண்டும்.

5. எல்லைகளுக்கு வெளியே 1. எல்லைகளுக்கு வெளியே

பந்து அல்லது ஆட்டக்காரர் எல்லைக் கோட்டையோ அல்லது ஆடுகளத்திற்கு வெளியேயுள்ள தரையையோ தொடும்பொழுது, எல்லைக்கு வெளியே (Out of bounds) சென்றதாகக் கூறப்படும். எல்லைகளுக்கு வெளியேயுள்ள ஒரு ஆட்டக்காரரைப் பந்து தொடும் பொழுதும் அல்லது அதற்கு வெளியேயுள்ள ஒரு ஆட்டக்காரரைப் பந்து தொட்டால்தான் வெளியே போக நேர்ந்தது என்று கொள்ளப்பட்டு, அவரே அதற்கு காரணமாக இருந்தார் என்று குறிப்பிடப்படுவார். பின் எல்லைகளுக்கு வெளியேயிருந்து எந்தக் குழு பந்தை எறியவேண்டும் என்பதை, நடுவர்தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

எல்லைகளுக்கு வெளியே பந்து சென்றது என்ற முடிவை நடுவர்கள் தெளிவாகக் கூற வேண்டும். அந்த முடிவை புரிந்து கொள்வதில், ஆட்டக்காரருக்கு ஐயம் ஏற்பட்டால், அந்த முடிவு தெளிவாகும் வரை பந்தை தன்வசமாக்கி உள்ளெறிதலைச் சிறிது நேரம் தாமதப்படுத்த வேண்டும்.

2. BGsuflsor soLuG) (Intervention)

தாக்கும் குழுவினர் எதிராளியின், வளையத்திற்குப் பின்னிருக்கும் கடைக் கோட்டில் அல்லது நடுக்கோட்டிற்கும் பக்கக் கோட்டிற்கும் இடையில், பந்தை உள்ளெறியும் வாய்ப்பை பெறுகிற பொழுது, அவர்களில் ஒருவர் பந்தை உள்ளெறியும் முன், நடுவரில் ஒருவர் அவரிடம் உள்ள பந்தைக் கட்டாயம் தொட்டுத்தர வேண்டும். இதன் முழு நோக்கமானது - எடுத்த முடிவைத் தெளிவாக்குவதற்காகவே, தடுக்கும் குழுவினர் அதற்குள் தங்களைத்