பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 93

தண்டனை: ஒவ்வொருமுறை இழைக்கின்ற ஒவ்வொரு குற்றத்திற்கும் பயிற்சியாளர்மேல் குற்றஞ்சாட்டி, ஒவ்வொரு தனிஎறி தண்டனையாகத் தரப்படும். தனிஎறியாளரை அக்குழுத்தலைவனே நியமிக்க வேண்டும். தனிஎறி எறியும் நேரத்தில், தனி எறி எல்லைக் கோடுகளின் மேல் யாரும் நிற்கக் கூடாது. தனிஎறி எறிக்குப் பிறகு, ஆடுகள நடுப்பாகமான எல்லைக் கோட்டிற்கு வெளியேயிருந்து தனி எறியாளரின் குழுவினர் பந்தை உள்ளெறிய, ஆட்டம் தொடங்கும்.

படுமோசமாக அல்லது பிடிவாதமாக இங்குக் கூறப்பட்டுள்ள விதிகளைத் தொடர்ந்து மீறித் தவறிழைக்கின்ற பயிற்சியாளர்கள், ஆடுகள சுற்றுப்புறத்திலிருக்காமல் அப்புறப்படுத்தப்படுவார். அவருடைய பொறுப்பானது, துணைப் பயிற்சியாளருக்கோ அல்லது அவரது குழுத் தலைவனுக்கோ போய்ச் சேரும்.

இடைவேளை நேரத்தின் போது, ஏற்படுகின்ற தனிநிலைத் தவறினை, பயிற்சியாளர், துணைப்பயிற்சியாளர் இழைத்திருந்தால், 2 தனி எறிகளும்; ஆட்டக்காரர் இழைத்தாலும் 2 தனி எறிகளும் தண்டனையாகத் தரப்படும். பிறகு ஆட்டம், மைய வட்டத்தில் பந்துக்காகத் தாவல் மூலமே தொடக்கம் பெறும்.

ஒரு ஆட்டக்காரர் எதிராளியின் மேல் மோதி உடல் தொடர்பு (Contact) கொள்ளும்போது ஏற்படுவது தனியார் தவறாகும் (Personal Foul).

<b) 5s flumi ssuplassir (Personal Fouls)

ஒரு ஆட்டக்காரர் தன் எதிராளியைப் பிடிப்பதோ, தள்ளுவதோ, இடித்து மோதுவதோ, இடறி விழுவதோ, எதிராளியின் முன்னேற்றத்தைக் கையால், தோளால், இடுப்பால், அல்லது முழங்கால்கள் முதலியவற்றால் நீட்டித் தடை செய்வதோ கூடாது. அல்லது சாதாரணமாக இருக்கும் நிலையை விட்டு உடலை வளைத்தோ அல்லது முரட்டுத்தனமான செயல்களினால் எதிராளியைத் தடை செய்வதோ கூடாது. இன்னும் அவரது கைகள் எதிராளியின் கையில் பந்து இருக்கும் பொழுது, எதிர்பாராமல் படுவதேயாகும். ஆனால் வளையத்தினுள் பந்தை எறியக் குறிபார்க்கும் நேரத்தில் அல்ல.

பந்தை வைத்திருப்பவரின் பின்புறமாகச் சென்று, பந்தை எடுக்க நெருங்குகிற தடுக்கும் குழுவைச் சேர்ந்த ஆட்டக்காரர், அவரை இடிக்க நேர்ந்தால் அதுவும் ஆளைத் தள்ளுவதாகவே கருதப்படும். ஏனெனில் வளையத்தினுள் பந்தை எறிய அவர் தன்னை