பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


67 சிவக்கும் என்று சித்தர் திருமூலர் பாடுகிறர். "ஏற்றி இறக்கி, இருகாலும் பூரிக்கும் காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை. காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக் கூற்றை உதைக்குங் குறியது வாமே!" காற்றுக்கு அவ்வளவு சக்தியா என்று கேட்கும் கேள்விக்கு அவர் பாடுகின்ற வரிகளைப் பாருங்கள் படியுங்கள். எமனையும் எட்டி உதைக்கின்ற சிறந்த வலிமை திறமை, உடற் பயிற்சியால் காற்றைப் பயன்படுத்திக் கொள்ளும் தன்மையால் பெற்றுவிடலாம் என்ருல், உடல் எத்தகைய முழுத் தன்மையை, மேன்மையை அடைகிறது என்பதை நாம் எளிதாகப் புரிந்துகொள்ளலாமே! உடல் முறுக்கேறுகிறது அதல்ை உள்ளம் கிறுக்கேறு கிறது என்று உளருவோருக்கு "வளமான உடலில் தாள் வளமான மனம் வாழும் என்று வாழ்க்கையின் குறிக் கோளாக வாழ்ந்த கிரேக்க மக்களே நினைவுக்குக் கொண்டு வருவோம். இயற்கை வாழ்வு வாழ்ந்த தமிழினத்தாரை நினைவில் நிறுத்துவோம். சித்தர் பாடுகின்ருர். 'புறப்பட்டு வாயு புகவிடா வண்ணம் திறப்பட்டு நிச்சயம் சேர்ந்துடன் கின்ருல் உறப்பட்டு கின்றது உள்ளம் ' ஆகவே, உடல் உறுதி பெறுகிறபோது, உள்ளமும் உறுதி பெறுகிறது என்பது உண்மையாகின்றதன் ருே! நெறியைப் படைத்தான். நெரிஞ்சலைப் படைத்தான் நெறி பில் வழுவின், நெரிஞ்சில் முள் பாயும்" என்ற திருமூலர் பாடலுக்கிணங்க, எந்த வழி நடைப் பயணத்திலும் ஏனே