பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


6சரித்திர நிகழ்ச்சிகளின் சாரத்தைப் பிழிந்து, தமிழ்த் தேன் கலந்து, இலக்கிய நயம் மிளிர, இதமான கட்டுரைகளாக எழுதிய என் முயற்சியைத் தினமணி ஆசிரியர் அன்பு கூர்ந்து சுடர் இதழில் வாராவாரம் வெளியிட்டு என்னை இன்புற ஊக்குவித்தார்கள்.

அமரர் ஜாம்பவான் அவர்களின் அன்பும் ஆதரவும் என் முயற்சிக்குப் பெரிதும் பக்கபலமாக இருந்து உதவின.

இந்த நேரத்தில் அவர்களது அன் ைபயும் ஆதரவையும் நன்றியுடன் நிகனத்து மகிழ்கிறேன்.

உற்ற நேரத்தில் அறிவுரை தந்தும், உறுபொருள் கொடுத்தும். உற்சாகப்படுததியும் வருகின்ற என் அன்புமிகு ஆசிரியர் டாக்டர் ராப்சன் அவர்களுக்கு என் உளங்கனிந்த நன்றி,

எல்லாவகையிலும் எனக்கு உற்றத் துணையாக இருந்து உதவுகின்ற R. சாக்ரட்டீசுக்கு என் நன்றி.

என் அரிய முயற்சியை ஆதரித்துவரும் அன்பர்கள் அனேவருக்கும் இந்த நூலே அளித்து, அன்புக்கும் ஆதரவுக்கும் என் இதயங்கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வணக்கம்

ஞானமலர் இல்லம் }

சென்னேட 17

எஸ்.கவரஜ் செல்லையா