பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87


எனவே, உடற் கூடும் அந்தக் கூட்டிலே குடியிருக்கும் உள்ளமும் வளமும் நலமும் பெற, உடல் திறனோடு மனிதன் வாழவேண்டும். ஒவ்வொரு மனிதனும் "உடல் திற நிலை யோடு உளநலமும் பெற்று சிறப்புற வாழ வழி வகைகளைக் கூறி, அதற்கான வாய்ப்புகளையும் வழங்குகிறது உடற்கல்வி வாழ்க்கையி ன் அடிப்படையே அசைவு தான், ஆவி நீத்தவன் ஒருவனே அசைவினிறி கிடக்கிறான் இயங்காத இயந்திரத்தின் உறுப்புகள் எவ் வாறு மழுங்கி, எவ்வாறு பழுதாகிப் பணி செய்யாது பலனற்றுப் போகிறதோ, குடியில்லாத வீடு எவ்வாறு குப்பை மேடாக மாறுகிறதோ: அதே போலத்தான் மனித உடலின் உறுப்புக்களும்: உழைப் பால் வளருகின்றன. உறுதி படைகின்றன. ஓய்ந்து கிடக்கும் உறுப்புக்கள் ஒடுங்கி உபயோக மற்றுப் போகின்றன என்பதை, யாரு வம் அறிவர். ஆகவே இன்றும் உறுப்புகளுக்கு நாம் இயக்கம் அளிக்க வேண்டியது அ வசியமாகிறது. இயங்கும் உறுப்புக்கள் இயன்றவரை இயங்கிக் களைத்த பின்னர். காணும் ஓய்விலும் அமைதியிலும் பெறுகின்ற இன்பத்தை சொல்வதால் உணர முடியாது. அதை அனுப்பதால்தான் அறிய முடியும். உடற்கல்வி அத்தகைய இன் பத்தை அளிக்க வல்லதாகும். ஆனால், நம் நாட்டில் உடற் கல்வி யைப் பற்றி எத்தனையோ கருத்து வேறு பாடு கள் உலவி வருகின்றன. அதன் சேவை சிறிதுதான் என் பாரும், தேவையே இல்லே என்று தாக்கிப் பேசுவோரும், படிப்பு இதனால் பாழாகிறது என்போரும் (தானே அவ் வாறு ஆனவர் போல), இதிலே என்ன இருக்கிறது என முற்றும் உணர்ந்தவர் போல) கேள் விக் குறியை வீசி விட்டு கைதட்டுகளைப் பெறுபவர்கள் இருக் கின்ற நிலையிலே, சிறக்கின்ற கல்வியும் தாயற்ற மழலை போலத் தத்தளிக்கிறது.