பக்கம்:விளையாட்டுக்களில் வினாடி வினா விடை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடுத்திருக்கிறேன். எவ்வளவு தூரம் இந்த விளையாட்டுக்களில் நாம் லயித்திருக்கிறோம். வரலாறு ஆகியிருக்கும் அந்தச் செய்தி களைக் கிரகித்திருக்கிறோம் என்று தன்னைத் தானே சோதித்துப் பார்க்க இந்நூல் ஒரு சமய சஞ்சீவி. அன்றாடம் பத்திரிக்கையிலே வந்த செய்திகள்தான் என்றாலும் சில நினைவாற்றலைத் தூண்டும் சங்கதிகளாகும். கல்வித்துறையிலே கணிசமான அளவுக்கு ஒரு பெரும் இடத்தைப் பெற்றுத் திளைக்கும் விளையாட்டுத் துறையில், இன்பத்துடன் ஈடுபடும் மாணவர்களுக்கு இந்நூல் பெரிதும் உற்சாகம் ஊட்டுவதாக அமையும். விளையாட்டுத்துறை வளர பணியாற்றும் ஆசிரியர் ஆசிரியைகளின் வளமான சிந்தனைக்கு, சற்றுப் பக்கத் துணையாகவும் இந்நூல் உதவும். விளையாட்டை விரும்பும் மக்களுக்கு இது ஒர் நல்ல வழிகாட்டியாகவும் விளங்கும். ஆயிரமாயிரம் வினாக்களை நமக்கு விடுத்துவரும் பரந்த விளையாட்டுத் துறையில் பிறந்திருக்கும் சில நூறு கேள்விகளை, இயன்ற வரையில் எழுதித் தொகுத்துள்ளேன். முடிந்தவரை எல்லா விளையாட்டுக்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கின்றன என்றாலும் இது ஒரு முழு நூல் அல்ல. பெரும் முயற்சிக்கு இது ஒரு தொடக்கம் என்றால் அதுதான் உண்மை. ஞானமலர் இல்லம், டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா சென்னை-17,