பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48


பல அழகிய குழிகளை வைத்துக் கொண்டு இந்த ஆட்டம் ஆடப்பெறுவதால் (பல்+அம்+குழி) பல்லாங்குழி என்று அழைக்கப்பட்டிருக்கலாம்.

பண்ணை என்ருல் பள்ளம் என்பதாகும். பண்ணைபொருளில் வரும். கிராமங்களில் தரையில் நெல் குத்துவதற்காகத் தோண்டப் பெறுகின்ற சிறு பள்ளத்திற்குப் பண்ணே என்றும் கூறுவதுண்டு. ஆகவே நெற்குத்துவது போல பண்ணே (பள்ளம்) வட்டமாகப் பறித்து, அதில் கற்களே இட்டு ஆடும் ஆட்டத்திற்குப் பண்ணுங்குழி என்று பெயர் வந்திருக்கக்கூடும்.

பூமியில் சிறு பள்ளந் தோண்டி குழியாக்கி, காய்கள் போ ட் டு ஆடப்பெற்றிருப்பதால், (பள்+அம்+குழி) பள்ளாங்குழி எனப் பெயர் பெற்று, காலப் போக்கில் மாறி வழங்கப் பெற்றிருக்கலாம்.

வரிசை ஒன்றுக்கு 7 குழிகள் வீதம், இரண்டு வரிசைக்குப் பதினன்கு குழிகள் மொத்தம் வைத்துக் கொண்டு ஆடுவதால், இந்த ஆட்டத்தை அக்கால மக்கள் பதினான்கு குழி ஆட்டம் என்று அழைக்க, அதுவே சொல் வழக்காக, பதினங்குழி என்றும் அழைக்கப் பெற்றிருக்கலாம்.